July 25, 2023

திருமணத்தில் மட்டும்தான் சாதி பார்க்கிறோம்’ என்று சாதிய மனநிலையை மறைக்கும் சப்பைக்கட்டுகளையும் புரட்டையும் அவதானிக்கிறோம். இக்கருத்து அகமண முறையினைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குரிய தற்கால மொழித்தந்திரங்களில் ஒன்று என்றே கருத வேண்டியுள்ளது. அகமணம் (Endogamy) என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, வகுப்பு, வர்க்கம்  அல்லது இனப்பிரிவுகளுக்கு உள்ளேயே மணம் செய்து கொள்ளும் முறையைக் குறிக்கிறது. சாதிப்பிரிவுகள் காணப்படும்  இந்தியா , இலங்கை போன்ற நாடுகளில் சாதி  ஒரு அகமணக் குழுவாகத் தொழிற்படுகிறது.  தமிழர்களைப்  பொறுத்த வரையிலும் கூடப்…

July 25, 2023

இலங்கையின் பழைய துறைமுகங்களில் ஒன்றாகவும், பண்பாடும் மரபுகளும் செறிந்த இடமாகவும், கடந்த முப்பதாண்டுகளில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊராகவும் அறியப்படும் வல்வெட்டித்துறைக்கு அருகில் ‘வல்வெட்டி’ என்றொரு கிராமம் இருக்கின்றது. குறித்த துறைமுக நகரம் பற்றிக் கிடைக்கின்ற தகவல்களின்படி வல்வெட்டியின் துறைமுகமாதலால் ‘வல்வெட்டித்துறை’ என்று அழைக்கப்பட்டிருக்கின்றது. இங்கே வல்வெட்டி என்ற கிராமம் ஆதிக்க சாதி வெள்ளாளர்களைச் செறிவாகக் கொண்டது. வல்வெட்டித்துறையானது ’கரையார்’ சமூகத்தை செறிவாகக் கொண்டது. இன்றும் வல்வெட்டியில் இருக்க கூடிய மக்கள் தங்களின் நினைவிலும் பயன்பாட்டிலும்…

July 25, 2023

என்னுடைய தம்பியின் சிறுபிராயத்தில் வீட்டிற்கு வரும் ’வெள்ளை’ என்ற மரமேறும் தொழிலாளியைக்காட்டிப் பயப்படுத்தி அவனுக்குப் பூச்சாண்டி காட்டவும் சோறு ஊட்டவும் செய்வார்கள். வெள்ளை வாறான், வெள்ளேட்டைப்பிடிச்சு குடுத்துடுவன் என்பதாக பயமுறுத்துவார்கள். அவனும் வெள்ளைக்குப் பயப்பிடுவான். ஊரில் அத்தனை பேர் இருந்தும் ஏன் குழந்தையொன்றைப் பயமுறுத்த வெள்ளை என்ற கேள்வி எழுகிறது. அன்றைக்கு வெள்ளைக்கும் தான் பூச்சாண்டியாக இருப்பதில் ஒரு தயக்கமும் இருக்கவில்லை அல்லது வெள்ளையால் அதை மறுக்கவும் முடியவில்லை. இவ்வாறு ”பூச்சாண்டி” காட்டிப் பயப்படுத்த ஒடுக்கப்பட்ட சமூகமல்லாத…

July 25, 2023

எங்களுடைய பாடசாலைக்காலத்தில் ஒரு பகிடி இருந்தது. மிகச்சாதாரணமாக, பிள்ளைகள் அதையொரு நகைச்சுவையாக, துணுக்காகப் பகிர்ந்து கொள்வார்கள். பறையர் சாதியைச் சேர்ந்த ஒருவர் பொது வாசகசாலையொன்றில் பத்திரிகை வாசித்துக்கொண்டிருக்கிறான். அப்போது முக்குவர் சாதியைச் சேர்ந்த ஒருநபர் அங்கே வருகிறார். அவர் பத்திரிக்கை படிக்க விரும்புகிறார் ஆனால் மற்றவர் இவரைக்கவனிக்காமல் தொடர்ந்தும் வாசித்துக் கொண்டிருக்கிறார் உடனே இவர் அவரை ‘பேப் – பறையா வாசிக்கிறாய்?’ என்கிறார், உடனே வாசித்துக் கொண்டிருப்பவர் சளைக்காமல் ‘முக்குவரறிவித்தல் வாசிக்கிறன்’ என்று சடைந்து சொல்கின்றார். அவர்…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’