July 25, 2023
மறைந்து போன அத்தனை தலைமுறைகளின் மரபுகளும், வாழ்ந்திருப்பவர்களின் மூளையை அழுத்திக்கொண்டிருக்கின்றன.-கார்ல் மார்க்ஸ் பொருட்களும் சேணங்களும் மனிதர்களைச் சவாரி செய்கின்றன.-எமர்சன் 1 ஈழத்தில் காணப்படக்கூடிய கலாசார மரபுரிமைகளுக்குள் அதனுடைய கட்டடக்கலைகளும் கட்டட மரபும் பிடித்துக்கொள்கின்ற இடம் முக்கியமானது. ஒரு கட்டடத்தை; அது நிரப்பியுள்ள வெளியினதும், அதை சூழ்ந்துள்ள வெளியினதும் அக, புறவயமான வரலாற்றுப் பின் புலம் , சமூக அர்த்தப்பாடு, அழகியல் என்பவற்றைக்கொண்டு அவற்றை மரபுரிமைகளாகக் கருதுகின்றோம். ஆனால் பொதுப்புத்தியில், இக்கட்டடங்களை வாசிக்கும்போது நம்மிடம் அரசியல் மயமற்ற…