அன்புள்ள பல்கலைக்கழக தோழர்களுக்கு ,

yathaadmin/ July 17, 2016/ கட்டுரை/ 0 comments

  அன்புள்ள  பல்கலைக்கழக தோழர்களுக்கு , நேற்று யாழ்பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தையும் அது சார்ந்து வெளிவந்த செய்திகள் பற்றியும் இங்கே இம்மியளவும் கதைப்பதற்கு எனக்கு உடன்பாடில்லை.  கொட்டனை ஓங்கினார்கள், கல் எறிந்தார்கள் காயம் வந்தது, பொலீஸ் வந்தது,சிங்களவன் என்றோம் ,தமிழன் என்றோம் என்ற பாணியில் மக்களை உசுப்பேத்தி  வர்ணனைகளை அள்ளி வீசும் எந்த ஊடகத்திற்கும் வெளியே நான் நிற்க பிரியப்படுகின்றேன். இது  நாம் உரையாடிக்கொள்ள வேண்டிய தருணம். நேற்று இரவு பல்கலைகழகத்தை கடந்துவரும் போது மயான அமைதியுடன் பொலீஸ் சூழ இருந்தது. பகல் நடந்தவைகள்

Read More

தீட்டுத்துணி

yathaadmin/ July 10, 2016/ கதை/ 0 comments

துணியின் உபகதை துணியினுடைய உபகதை வவுனியா மாவட்டத்தில் பூவரசங்குளம் என்ற கிராமத்தில் உள்ள ஆசுப்பத்திரியில்  இவ்வாறு ஆரம்பிக்கின்றது. 01 மார்ச் 2010. சூரியன் மிக அருகில் இருக்கின்றது என்ற நம்பிக்கையுடைய மக்கள் இன்னும் பூமியில் இருக்கின்றார்கள் என்பதைனை ஏற்றுக்கொள்ளுமளவு  அந்தப்  பங்குனிமாதம் தொடங்கியிருந்தது. வெம்மை மிக்க பொஸ்பரஸ்குண்டுகளில் இருந்து தப்பிவந்து நாங்கள் நீற்றறையைப்போல் கொதிக்கும் தறப்பால் கூடாரங்களுக்குள் சிக்கிக்கொண்டோம். புழுதிபடிந்து போய் வெட்ட வெளியில் அடிக்கப்பட்ட அத்தனை கூடாரத்தினுள்ளும் காலை ஒன்பது மணிக்கு மேல்யாரும் இருக்க முடியாது. எங்காவது ஒரு மூலையில் இருக்கும் மரத்தடியை

Read More

மிதிவெடியை கட்டவிழ்த்தல்

yathaadmin/ June 3, 2016/ கட்டுரை/ 0 comments

  சமூக அசைவியக்கத்தில் உணவுப்பண்பாட்டை வாசித்தல் என்பது குறித்த சமூகத்தின் …. நிறுத்து , சும்மா எப்பபாத்தாலும்  யுனிவர்சிட்டிக்கு திசிஸ் பேபர் சமிட் பண்ணுறபோல  ஆரம்பிக்கிறது இதே வேலையாப்போச்சு எனக்கு . ஒண்டுமில்ல மக்காள்   அன்றாடம் சாப்பிடுற சாப்பாடுகளில என்ன சுவையிருக்கு , சத்திருக்கு , எது விலை குறைவா இருக்கு , என்று பார்க்கிறனாங்கள் . அதுக்கு பின்னால என்ன கதையிருக்கெண்டு எப்பபாத்திருக்கிறம் ?  உதாரணத்துக்கு மிதிவெடிய எடுத்துக்கொள்வோம் . எனக்குத்தெரிஞ்சு 1990 களின் பிறகு ஈழத்தில குறிப்பா யாழ்ப்பாணப்பக்கம் கண்டறிப்பட்ட ஒரு

Read More

ஆண்டிகனி  ; அபத்தத்தின் மேடைவெளி   

yathaadmin/ May 13, 2016/ கட்டுரை/ 0 comments

  சிறுவயதுமுதல் கிரேக்க தொன்மங்களில் இருந்து பிறந்துவந்த வீரசாகச கதைகளை ஆர்வத்துடன் வாசித்துவந்தவன் . அந்த பழக்கம், இப்போதுவரை கிரேக்க தொன்மங்கள் மீதான ஆர்வம் குறையாமல் இருக்கின்றது. அக்கிலீசிலிருந்து ஹர்குலிஸ்வரை யான வீரர்களின் கதைகளும் , சீயூஸ் தொடக்கம் அதீனா வரையுள்ள கடவுளர்கள் பற்றிய கதைகள் , வெட்ட வெட்ட தலைமுளைக்கும் நாகங்களும்  ஜேசனின் தங்க கம்பளமும் , தீசியசின் எருமையரக்கன் என்று என்னுடைய சிறுபிராயம் முழுவது கிரேக்க தொன்மக்கதைகளால் நிரம்பியது.பின்னர் கொஞ்சம் வாசிப்புவிரிய கிரேக்கத்தின் துன்பியல் முதலான பிரதிகள் என்னை வந்தடைந்தன. கீழைத்தேசத்தின்

Read More

மொழியின் அபாயம் -கிரிஷாந்தை தொடர்ந்து .

yathaadmin/ April 29, 2016/ கட்டுரை/ 0 comments

அன்புள்ள கிரிஷாந், //குறித்த சொல்லாடல்களான ” தாழ்த்தப்பட்ட”, “ஒடுக்கப்பட்ட”,”தலித்” போன்றவற்றின் மூலம் தாம் அழைக்கப்படுவதை மக்கள் விரும்புவதாகத் தெரியவில்லை. அது அவர்களுக்குள் தாழ்வுணர்ச்சியைக் கொடுக்கும் என்று நான் கருதுகிறேன். குறித்த சொல்லாடல்களை தமிழகம் ஓர் “அரசியல் சொல்லாக” கையாள்கிறது ஆகவே அதனை உச்சரிக்கும் தேவை அதிகமாக உள்ளது.// -கிரிஷாந் -(Kiri Shanth) தர்முபிரசாத்தின் சாதியம் பற்றிய உரையாடலின் தொடக்கம் , அதன்பின்னரான நண்பர்களின் கருத்தாடல்கள் ஏற்படுத்திய புதிய உரையாடல் வெளியில் மேலே மேற்கோள் காட்டபட்டிருக்கும் நீங்கள் குறிப்பிட்ட சமூகத்தின் ஒரு சாரார் மீது கையாளப்படும்

Read More

தலித்தியமும் தாய் நிலமும் – தர்மு பிரசாத்தை முன் வைத்து.

yathaadmin/ April 26, 2016/ கட்டுரை/ 0 comments

// தலித் – தலித்தியம் குறித்து அதிகமும் புலம்பெயர் செயற்பாட்ட ள ர்களே செயர்படுகிறார்கள் போல் இருக்கிறது. உண்மையில் நீங்கள் எப்படி அதனை புரிந்து கொள்கிறீர்கள்? அங்கிருந்து அது குறித்த பதிவுகள் வருவதில்லை என்பதில் கேட்கிறேன்// -தர்மு பிரசாத் -(Pirasath Dharmu)   அன்புள்ள தர்மு பிரசாத் , ஈழத்தினுடைய முரண்பாட்டு அல்லது பிரச்சினைகளைக் கிளர்த்துகின்ற சமூக அமைப்பினை பின்னோக்கி தள்ளுகின்ற முக்கிய பிரச்சினையாக சாதிய அல்லது தலித்திய அடக்கு முறைகள் காணப்படுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் . நீங்கள் சொல்வது போல் ஈழத்து பரப்பின்

Read More

கடைசியாய் ஒரு தெரு மூடி மடமிருக்கிறது .

yathaadmin/ April 4, 2016/ கட்டுரை/ 0 comments

(தொன்ம யாத்திரை – முன் கள ஆய்வு 3.4.2015 )   மிகவும் களைப்பாக இருக்கிறது நேற்றைய வெய்யிலும் நடையும் உடலை மிக களைப்பாக்கிவிட்டது , ஆயினும்  , மனதோ  மிக உற்சாகமாக தன்னை உணர்கின்றது. ஒரு வாரத்திற்கு முன் அறிவித்ததைப்பொலவே நேற்றுக் காலையில் மரபுரிமைகளைப்பாதுகாப்பதற்கும் கொண்டாடுவதற்குமான “தொன்ம நடையின் – முன் களஆய்வுக்காக”   தெருமூடி மடத்திற்கும் , ஓடக்கரைக்கும் போய் வந்திருக்கிறோம் , என்னுடைய மனதைப்போலவே வந்திருந்த கிரிஷாந் , சிவனுசன , கபில் ,காண்டிபான் , தர்சன் , சித்திராதரன் ,ராகவன்

Read More

ஆக நீங்கள் ஒரு ஈழத்து எழுத்தாளர் ?

yathaadmin/ April 1, 2016/ கட்டுரை/ 0 comments

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளின்  மீது அச்சமாயிருங்கள்  –குர் ஆன் இந்த உலகத்தில் யாரெல்லாம் மகத்தான இலக்கியங்களை ஆக்கியிருக்கிறார்கள் என்று பாருங்கள் , அவர்களில் பெரும்பாலானோர்  அன்பின் , உண்மையின் பக்கத்தில் நின்ற மனிதர்களே, போன நூற்றாண்டில் எழுதப்பட்ட கெட்ட விடயங்களை சொல்கின்ற , ஒரு இலக்கியத்தை கேட்டால் உங்களால் சட்டென்று சொல்லி விடமுடியுமா ? ஹிட்லரின் “”மெயின் காம்பை” உலகத்தின் மகத்தான இலக்கியம் என்று சொல்வீர்களா ? கால நீரோட்டத்தை நன்கு கவனியுங்கள் எல்லா காலங்களிலும் போர்கள் இருந்தன , வன்முறைகள் நிகழ்ந்தன , ஆனால்

Read More

Fuck the british -லண்டன்காரரை முன் வைத்து

yathaadmin/ March 25, 2016/ கட்டுரை/ 0 comments

    01 கோலியாத் கிழவன் தன்னுடைய குறிப்பு புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருந்தான். இலங்கைத்தீவில்  “பறங்கி கோட்டை போனது போல” என்று ஒரு வழக்கு நிலவி வருகின்றது. இது ஒரு வரலாற்று  சம்பவத்தை குறிக்கும் தொன்ம வழக்காகும், 1505 ஆம் ஆண்டு ஐரோப்பிய  நாடுகாண்பயணிகளான  போர்த்துகேயரது லொரன்ஸ் சோ டி அல்மெய்டா  என்ற கப்பல் படை தளபதி புயல் காற்றில் சிக்குண்டு  இலங்கையின் தென் துறைமுகமான காலிக்கடற்கரையில் வந்து நங்கூரமிட்டான். அப்போது இலங்கை இராசதானியின் தென் பகுதியை  8 ஆவது வீரபராக்கிரம பாகு என்ற

Read More

ஜேசுவின் மகளைப் பின் தொடர்தல்

yathaadmin/ March 21, 2016/ கதை/ 0 comments

  அப்பொழுது ஆதாம் இவள் என் எலும்பில் எலும்பும் மாம்சத்தில் மாம்சமாகவும்  இருக்கிறாள் . இவள் மனுஷனில் இருந்து எடுக்கப்பட்டமையால் மனுஷி என்று அழைக்கப்படுவாள் என்றான்                                                  -ஆதியாகமம் 2 : 23 அவளை அன்று தற்செயலாகத்தான் கண்டேன், வெள்ளை உடையில்  அந்த மழைநாளின் மாலைப்பொழுதில் எங்கோ போய்க்கொண்டிருந்தாள். சந்தடி இல்லாமல்

Read More

அகரமுதல்வன் : வக்கிரத்தைப் புணரும் ஆண்குறி.

yathaadmin/ March 18, 2016/ கட்டுரை/ 0 comments

விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு முன்னாள் போராளிகளும் ,ஆய்தத்தோடு இருந்த போது ; சரியோ தவறோ ஒரு இயக்கத்தில் இருந்தபோது ; அவர்களிடமிருந்த நிமிர்ந்த பார்வையின் தற்போதைய நிலையை எத்தனைபேர் தரிசித்திருக்கிறீர்கள் ? அவர்களின் உடலில் இரும்புத்துருக்களும் துண்டுகளும் இன்னும் அகற்றியும் அகற்றாமலும் இருப்பினும் அவை மனம் வரை இறங்கி உறுத்திக்கொண்டிருக்கின்றது. காவலாளிகளாகவும், கூலிகளாகவும் , ஏன் பிச்சைக்காரர்களாகவும் , இயல்புச்சமூகத்திலிருந்து விரும்பியும் விரும்பாமலும் விலகி இருட்டிலே வாழ்கையை வாழ்ந்து தீர்த்துகொண்டிருக்கின்றது அவர்களின் ஆன்மா . மேற்படி ஜீவிக்கும் ஆன்மாவையும் கொடும்போரில் அந்தரித்து மரித்து போன ஆண்

Read More

ஏவாளின் புரவி

yathaadmin/ March 11, 2016/ கதை/ 4 comments

  ஆதாம் கடவுளிடம் மன்னிப்புக்கோரி ஒரு கடிதத்தை எழுதி முடித்திருந்தான். அன்று காலையில் தன் பிரியமான புள்ளிமான்களில்  தொடைகளில் அதிகம் சதைப்பிடிப்பான, அதிக தூரம் பயணிக்க தகுந்த  தெரிவு செய்து ,அதன் கழுத்தில்  மன்னிப்பு கோரிய கடிதத்தை கட்டி வடக்கு புறமாக அதனை தட்டிவிட்டான். அது செல்வதை  குன்றொன்றின் மீது ஏறி நின்று பார்த்தபடியிருந்தான். அப்போது அவனுக்கு பின்னால் கனைப்புச்சத்தம் கேட்டது திரும்பிப்பார்த்தான். “ம்” கம்பீரமாக நின்றிருந்தது. ”ம்”ஒரு பெண் குதிரை , அப்பளுக்கற்ற  வெள்ளைத்தேகம்  , காற்றை வருடிக்கொடுக்கும் நீளமானதும் மிக மென்மையானதுமான

Read More

BOX – கொடு நெடி.

yathaadmin/ March 10, 2016/ கதை/ 0 comments

  Box -முதலாம் கதை .   அண்ணா பெரும்பாலும் நள்ளிரவில்தான்  வருவான் , கூடவே இரண்டோ மூன்றோ போராளிகளையும் அழைத்துவருவான்.  அண்ணா வந்தால் அம்மா பரபரப்பாக புட்டோ இடியப்பமோ அர்த்த ராத்திரியில் அவிக்க  தொடங்கி விடுவாள் ,அண்ணாவும் அவன் சகாக்களும் அப்பாவுடன் இருந்து அரசியல் பேசுவார்கள் , அண்ணா வருவது பொறுப்பாளருக்கு தெரியாது என்பதால் நாங்கள் யாரும்  பள்ளிகூடத்திலோ , நண்பர்களிடமோ வாய் திறக்க கூடாதென்று அம்மா சொல்லியிருந்தாள். அண்ணா இயக்கத்தில் இணைந்து ஒருவருடம் தான் ஆகியிருந்தது. கட்டாயமாக குடும்பத்தில் ஒருவர் இணைந்தே

Read More