Category Archive: கட்டுரை

Apr 04

கடைசியாய் ஒரு தெரு மூடி மடமிருக்கிறது .

(தொன்ம யாத்திரை – முன் கள ஆய்வு 3.4.2015 )   மிகவும் களைப்பாக இருக்கிறது நேற்றைய வெய்யிலும் நடையும் உடலை மிக களைப்பாக்கிவிட்டது , ஆயினும்  , மனதோ  மிக உற்சாகமாக தன்னை உணர்கின்றது. ஒரு வாரத்திற்கு முன் அறிவித்ததைப்பொலவே நேற்றுக் காலையில் மரபுரிமைகளைப்பாதுகாப்பதற்கும் கொண்டாடுவதற்குமான “தொன்ம நடையின் – முன் களஆய்வுக்காக”   தெருமூடி மடத்திற்கும் , ஓடக்கரைக்கும் போய் வந்திருக்கிறோம் , என்னுடைய மனதைப்போலவே வந்திருந்த கிரிஷாந் , சிவனுசன , கபில் ,காண்டிபான் …

Continue reading »

Apr 01

ஆக நீங்கள் ஒரு ஈழத்து எழுத்தாளர் ?

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளின்  மீது அச்சமாயிருங்கள்  –குர் ஆன் இந்த உலகத்தில் யாரெல்லாம் மகத்தான இலக்கியங்களை ஆக்கியிருக்கிறார்கள் என்று பாருங்கள் , அவர்களில் பெரும்பாலானோர்  அன்பின் , உண்மையின் பக்கத்தில் நின்ற மனிதர்களே, போன நூற்றாண்டில் எழுதப்பட்ட கெட்ட விடயங்களை சொல்கின்ற , ஒரு இலக்கியத்தை கேட்டால் உங்களால் சட்டென்று சொல்லி விடமுடியுமா ? ஹிட்லரின் “”மெயின் காம்பை” உலகத்தின் மகத்தான இலக்கியம் என்று சொல்வீர்களா ? கால நீரோட்டத்தை நன்கு கவனியுங்கள் எல்லா காலங்களிலும் போர்கள் இருந்தன …

Continue reading »

Mar 25

Fuck the british -லண்டன்காரரை முன் வைத்து

    01 கோலியாத் கிழவன் தன்னுடைய குறிப்பு புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருந்தான். இலங்கைத்தீவில்  “பறங்கி கோட்டை போனது போல” என்று ஒரு வழக்கு நிலவி வருகின்றது. இது ஒரு வரலாற்று  சம்பவத்தை குறிக்கும் தொன்ம வழக்காகும், 1505 ஆம் ஆண்டு ஐரோப்பிய  நாடுகாண்பயணிகளான  போர்த்துகேயரது லொரன்ஸ் சோ டி அல்மெய்டா  என்ற கப்பல் படை தளபதி புயல் காற்றில் சிக்குண்டு  இலங்கையின் தென் துறைமுகமான காலிக்கடற்கரையில் வந்து நங்கூரமிட்டான். அப்போது இலங்கை இராசதானியின் தென் பகுதியை  …

Continue reading »

Mar 18

அகரமுதல்வன் : வக்கிரத்தைப் புணரும் ஆண்குறி.

விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு முன்னாள் போராளிகளும் ,ஆய்தத்தோடு இருந்த போது ; சரியோ தவறோ ஒரு இயக்கத்தில் இருந்தபோது ; அவர்களிடமிருந்த நிமிர்ந்த பார்வையின் தற்போதைய நிலையை எத்தனைபேர் தரிசித்திருக்கிறீர்கள் ? அவர்களின் உடலில் இரும்புத்துருக்களும் துண்டுகளும் இன்னும் அகற்றியும் அகற்றாமலும் இருப்பினும் அவை மனம் வரை இறங்கி உறுத்திக்கொண்டிருக்கின்றது. காவலாளிகளாகவும், கூலிகளாகவும் , ஏன் பிச்சைக்காரர்களாகவும் , இயல்புச்சமூகத்திலிருந்து விரும்பியும் விரும்பாமலும் விலகி இருட்டிலே வாழ்கையை வாழ்ந்து தீர்த்துகொண்டிருக்கின்றது அவர்களின் ஆன்மா . மேற்படி ஜீவிக்கும் ஆன்மாவையும் …

Continue reading »

Mar 02

சட்டத்தில் நிறுத்தப்பட்ட பிரதியாளார்கள் – நிலாந்தனின் ஆதிரை- உரையாடலை முன்வைத்து.

    (பாவ மன்னிப்பு-    ஆதிரை நாவலின் மீதான உரையாடல் வெளியில் மெளமாய் இருந்ததற்கு மன்னிப்புக்கோரவேண்டியவனாகியுள்ளேன். அதாவது என்னிடம் மட்டும் மன்னிப்பு கோர வேண்டியவனாக உணர்கிறேன்.) ஆதிரை நாவல் பற்றிய நிலாந்தனின் “ஆதிரையின் அரசியல்” என்ற மையத்தை சுற்றியோடிய உரையின் முற்பாதியை எல்லோரும் தெளிவாக மனம் கொள்ள வேண்டும் , காரணம் அது ஆதிரை எனும் பிரதியின் மீதான அபிப்பிராயம் மட்டுமல்ல ஆதிரையை வகை மாதிரியாக கொண்ட ஒரு முக்கிய வியாக்கியானமுமாகும் , பின் போர்ச்சூழலில் …

Continue reading »

Feb 25

ஒரு புத்தகத்திருடனின் ஒப்புதல் வாக்குமூலம் -01

இங்கே சிறைக்கதவுகள் ,மூன்று பக்கமும் எழுந்து நிற்கும்  பழுப்பேறிய சுவர்  மற்றும்  வெள்ளை விதானச்சுவர் தவிர இங்கே புனைவென்று சொல்லத்தக்க இன்னும் இரண்டு விடயங்கள் இருந்தன ஒன்று இந்த சீட்டுக்கட்டு. அடுத்தது அனுக்குட்டி , அழுந்தும் தனிமையை போக்குவதன் பொருட்டு உன்னையும் ஒரு புனைவாக ஆக்கும் படி நானிந்த காலத்தால் சபிக்கப்பட்டிருப்பது  எதெட்சையான ஒன்றல்ல அனு. உனக்கு சொல்வதற்காக கதைகளை இந்த சீட்டுகட்டுகளாக மாற்றி வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சீட்டாக அடுக்கி அடுக்கி உனக்கு எதிரில் இந்த சீட்டுகட்டுக்கோபுரத்தை …

Continue reading »

» Newer posts