Category Archive: கதை

Jan 02

ராஜகுமாரியின் குதிரை .

  2002.06.3 விசுவமடு , சோதியா படையணி முகாம். அக்காக்கள் அந்தப்பெரிய பள்ளத்தை நிரவிக்கொண்டிருப்பதைப் பார்த்தபடியிருந்தாள் கெளஷல்யா. அவள் கையில் ஒரு குதிரைப்பொம்மை இருந்தது. தனிமையில் இருக்கும்போது அப்பொம்மையை வைத்தே விளயாடிக்கொண்டிருப்பாள். மாலதியக்கா இருக்கச்சொன்ன தென்னங்குற்றியில் கால்களை காற்றில் உலவ விட்டபடி கையில் குதிரை பொம்மையுடன் ,துர்க்கா அக்கா கொடுத்த கண்டோசைக் கடித்துக்கொண்டிருந்த கெளஷல்யாவைப்பற்றித்தான் கிடங்கை மூடிக்கொண்டிருக்கும் பெண்போராளிகளும் பேசிக்கொண்டிருந்தனர். “கெளசின்ர அப்பா நேற்றும் தாய்க்கு அடிச்சுப்போட்டாராமடி ” “அந்தாள விதுசாக்காட்ட சொல்லி ஒருக்கா கூப்பிட்டு வொன் …

Continue reading »

Oct 29

ஏவாளின் புரவி

    ஆதாம் கடவுளிடம் மன்னிப்புக்கோரி ஒரு கடிதத்தை எழுதி முடித்திருந்தான். அன்று காலையில் தன் பிரியமான புள்ளிமான்களில்  தொடைகளில் அதிகம் சதைப்பிடிப்பான, அதிக தூரம் பயணிக்க தகுந்த  தெரிவு செய்து ,அதன் கழுத்தில்  மன்னிப்பு கோரிய கடிதத்தை கட்டி வடக்கு புறமாக அதனை தட்டிவிட்டான். அது செல்வதை  குன்றொன்றின் மீது ஏறி நின்று பார்த்தபடியிருந்தான். அப்போது அவனுக்கு பின்னால் கனைப்புச்சத்தம் கேட்டது திரும்பிப்பார்த்தான். “ம்” கம்பீரமாக நின்றிருந்தது. ”ம்”ஒரு பெண் குதிரை , அப்பளுக்கற்ற  வெள்ளைத்தேகம்  …

Continue reading »

Jul 10

தீட்டுத்துணி

துணியின் உபகதை துணியினுடைய உபகதை வவுனியா மாவட்டத்தில் பூவரசங்குளம் என்ற கிராமத்தில் உள்ள ஆசுப்பத்திரியில்  இவ்வாறு ஆரம்பிக்கின்றது. 01 மார்ச் 2010. சூரியன் மிக அருகில் இருக்கின்றது என்ற நம்பிக்கையுடைய மக்கள் இன்னும் பூமியில் இருக்கின்றார்கள் என்பதைனை ஏற்றுக்கொள்ளுமளவு  அந்தப்  பங்குனிமாதம் தொடங்கியிருந்தது. வெம்மை மிக்க பொஸ்பரஸ்குண்டுகளில் இருந்து தப்பிவந்து நாங்கள் நீற்றறையைப்போல் கொதிக்கும் தறப்பால் கூடாரங்களுக்குள் சிக்கிக்கொண்டோம். புழுதிபடிந்து போய் வெட்ட வெளியில் அடிக்கப்பட்ட அத்தனை கூடாரத்தினுள்ளும் காலை ஒன்பது மணிக்கு மேல்யாரும் இருக்க முடியாது. …

Continue reading »

Mar 21

ஜேசுவின் மகளைப் பின் தொடர்தல்

  அப்பொழுது ஆதாம் இவள் என் எலும்பில் எலும்பும் மாம்சத்தில் மாம்சமாகவும்  இருக்கிறாள் . இவள் மனுஷனில் இருந்து எடுக்கப்பட்டமையால் மனுஷி என்று அழைக்கப்படுவாள் என்றான்                                                  -ஆதியாகமம் 2 : 23 அவளை அன்று தற்செயலாகத்தான் கண்டேன், வெள்ளை உடையில்  அந்த மழைநாளின் …

Continue reading »

Mar 11

ஏவாளின் புரவி

  ஆதாம் கடவுளிடம் மன்னிப்புக்கோரி ஒரு கடிதத்தை எழுதி முடித்திருந்தான். அன்று காலையில் தன் பிரியமான புள்ளிமான்களில்  தொடைகளில் அதிகம் சதைப்பிடிப்பான, அதிக தூரம் பயணிக்க தகுந்த  தெரிவு செய்து ,அதன் கழுத்தில்  மன்னிப்பு கோரிய கடிதத்தை கட்டி வடக்கு புறமாக அதனை தட்டிவிட்டான். அது செல்வதை  குன்றொன்றின் மீது ஏறி நின்று பார்த்தபடியிருந்தான். அப்போது அவனுக்கு பின்னால் கனைப்புச்சத்தம் கேட்டது திரும்பிப்பார்த்தான். “ம்” கம்பீரமாக நின்றிருந்தது. ”ம்”ஒரு பெண் குதிரை , அப்பளுக்கற்ற  வெள்ளைத்தேகம்  , …

Continue reading »

Mar 10

BOX – கொடு நெடி.

  Box -முதலாம் கதை .   அண்ணா பெரும்பாலும் நள்ளிரவில்தான்  வருவான் , கூடவே இரண்டோ மூன்றோ போராளிகளையும் அழைத்துவருவான்.  அண்ணா வந்தால் அம்மா பரபரப்பாக புட்டோ இடியப்பமோ அர்த்த ராத்திரியில் அவிக்க  தொடங்கி விடுவாள் ,அண்ணாவும் அவன் சகாக்களும் அப்பாவுடன் இருந்து அரசியல் பேசுவார்கள் , அண்ணா வருவது பொறுப்பாளருக்கு தெரியாது என்பதால் நாங்கள் யாரும்  பள்ளிகூடத்திலோ , நண்பர்களிடமோ வாய் திறக்க கூடாதென்று அம்மா சொல்லியிருந்தாள். அண்ணா இயக்கத்தில் இணைந்து ஒருவருடம் தான் …

Continue reading »

Feb 24

ஷண்முகநாதன் காயத்ரி

சுதந்திரபுரம் கிளிநொச்சி நகரைத் தாண்டி இராணுவம் நகர்ந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.  யாரிடம் கேட்டாலும்  “திட்டமிருக்கு கிட்ட வரட்டுமாம் ” என்றார்கள். தொடர்ந்து ஆமி முன்னேறிவந்தால்  முல்லைதீவு மட்டும்  போகும் எண்ணத்தில்தான் அப்பா இருந்தார், ஆனால் அம்மா உறுதியாக இருந்தாள். “இங்க இருந்து பிள்ளையள் பயத்திலையே அரைவாசி செத்து போங்கள்” “பெரியவன்ர வயசு பெடியளையும் பிடிக்க தொடங்கீட்டாங்கள் போல கிடக்கு” ஆகிய காரணங்ளை சொல்லி அப்பாவிடம்  ஆமி வந்தா ஆமிக்குள்ள போவம் என்ன நடந்தாலும் நடக்கட்டும் இனி இடம்பெயரேலாது …

Continue reading »