May 15, 2024

ஊரி : சொல்லின்  விழைவு இலக்கியத்தின் முதன்மைப் பயன் தன்னை அறிவது. சமூகத்திற்கு அவற்றில் இருந்து கிடைப்பவை மேலதிகமான பயன்கள் மட்டுமே. அறிதல் முறைகள் முதலில் தன்னிலையில் இருந்தே உருவாகின்றன.  அத்தன்னிலைகளில் இருந்து எழுந்து வருவதே அறிவியக்கம்.  ஏனெனில் இலக்கியத்தினால் கிடைக்கும் புகழ், செல்வம், அடையாளம் எல்லாமே அதன் உபரியான நிலைகள்தான். அவற்றுக்கென்று இலக்கியவாதியின் அகத்தில்  எந்த விழைவுகளும் இருக்கத் தேவையில்லை. அவருடைய புற உலக வாழ்விற்கு அவை உணவிடலாம், உதவலாம். மகிழ்வளிக்கலாம்.  எவ்வாறு இருந்த போதும் …

April 19, 2024

ஓர் அறிவிப்பு 52 வது சுவிஸ் இலக்கியச்சந்திப்பைத் தொடர்ந்து 53வது இலக்கியச் சந்திப்பை இத்தாலியின் சிசில் தீவில் நடத்தலாம் என இருக்கிறேன். அனலைதீவில் நடத்த ஆதரவளித்த நண்பர்கள் ஐரோப்பாவின் காலடியில் நசிவுண்டு கிடக்கும் சிசில் தீவில் 53வது இலக்கியச் சந்திப்பு நிகழ ஆவன செய்ய வேண்டுகிறேன். அந்த சிலக்கியச் சந்திப்பை ஒட்டியும் ஒரு தொகுப்பு வெளியிடலாம் என வேலைகளை ஆரம்பித்திருக்கிறேன். இம்முறை கவிதைத்தொகுப்பு. யாரையும் புண்படுத்தாத, விடுபடல்களே இல்லாத பெருந்தொகுப்பு திட்டம். முதலில் 5 இலட்சம் ஈழப்…

April 17, 2024

  Bruce Lee’s Library எதிராளி / THE OPPONENT சமூக செயற்பாடுகளில் இருந்து வெளியேறிய பிறகு இலக்கியம் என்னை  நமட்டுச் சிரிப்புடன் தான் எதிர்கொண்டது.  முன்பிருந்தே பெரும்பாலும் தினசரி ஏதேனும் எழுதுபவன், வாசிப்பவன்.  புனைவெழுதுவதைக் கைவிடாமல் இருந்ததுதான் என் வாழ்வில் எனக்கே நான் செய்துகொண்ட முழு நற்செயல்.  தொடங்கியதெல்லாம் இலக்கியத்தில் என்பதால் அது எங்களை நீங்காமல் உண்மையாக உடனிருந்தது. புனைவு எழுதுவதோ அதை எழுதும் போதே  அதற்கான ஆய்வுகளைச் செய்வதோ பயணங்கள் போவதோ எனக்குப் பழக்கமானதும் பிடித்ததும். …

April 9, 2024

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்தேன். இரவுப்பயணம், பக்கத்தில் தன்னுடைய ஐம்பதுகளில் இருந்த நபரொருவர் அமர்ந்து வந்தார். அடிப்படையான விசாரிப்புகள், புன்னகையோடு அமைதியாகிவிட்டோம். பகல் வெக்கையின் களைப்பு உடம்பை வறட்டியிருந்ததால்,  கொஞ்சநேரம் வாசித்து விட்டு உறங்கி விட்டேன். நள்ளிரவிற்குப் பிறகு திடுக்கிட்டு எழுந்து  யன்னலால் பார்த்தேன். கிராமங்களின் தோற்றங்கள் ஓடிக்கொண்டிருந்தன. சிங்களக் கிராமங்களா, தமிழ்க் கிராமங்களா என்று  மட்டுப்பிடிக்க முடியவில்லை. கைபேசியை எடுக்கப் போன போது பக்கத்தில் இருந்தவர்  மதவாச்சி நெருங்குது என்றார். நான் வெளியில் பார்த்தேன் உறுதிப்படுத்த…

August 26, 2023

நண்பர்களுடன்  யூலை முடிவில் ஒரு வெள்ளிக்கிழமை இரவு கண்டியில் சென்று இறங்கினோம். நீளமாக திட்டமிடப்படாத அதிகம் பணச்செலவற்ற  எக்களுடைய வட்சப் குறூப்பின் பெயரைப்போல அதுவொரு ‘கல்விச்சுற்றுலா’ அவ்வளவுதான். முதலில் கண்டி பிறகு ஹட்டன் மிகுதி எல்லாம் அந்தந்த நேரத்து நியாயம் என்று  விட்டு விட்டு புறப்பட்டிருந்தோம். பொதுப்போக்குவரத்தின் மூலம் பிரயாணப்படுவது என்று திட்டமிட்டிருந்தோம்.  இம்முறை மலையகத்திற்கு செல்வதில் தனிப்பட்டு என்னை ஆர்வப்படுத்தியது மலையக மக்கள் இந்த நாட்டிற்கு தோட்டத்தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்டு இருநூறு வருடங்கள் கடந்திருந்த நிகழ்வுகளும் சமநேரத்தில்…

July 25, 2023

இயற்கை மற்றும் சமூகச்சூழமைப்பில் மனிதர்கள் இயங்கும் முறையும் அவர்களின் நடத்தை முறையும்தான் உளவியலின் அடிப்படைகள். -மிக்காயில் பக்தின் அன்பை ஒரு செயல்வடிவமாக, செயலூக்கத்துடன் இணைத்து நிகழத்தக்க கலையாக அணுகுவதையே விரும்புகிறேன். ஒவ்வொருத்தரின் இருப்பையும் அவர்களுடன் இச்சமூகம் கொண்டிருக்கும் கொடுத்து வாங்குகின்ற பண்பையும் பிரக்ஞை பூர்வமாக அவர் வாழ்ந்த சூழலில் அவர்தம் செயல்களினால் புரிந்துகொள்வது பொருத்தமானது. குமாரதேவன் பற்றிய ஞாபகங்களை அவருடைய  தமிழ்ச்சூழலின் மீதான் பங்களிப்பை அவ்வாறு அணுகுதலே அவர் மீதிருக்கும் அன்பின் ஆகக்கூடிய செயலாக இருக்கும் என்று…

July 25, 2023

இலங்கை அரசாங்கத்தின் முன்பள்ளிக் கல்வி தொடர்பான அரச கொள்கையின் 2017 ஆம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளின் படி இலங்கை முழுவதும் 578,160 குழந்தைகளுக்கு முன் பிள்ளைப்பராயக் கல்வி மற்றும் பராமரிப்பினை (Early Childhood Education Development and Care) வழங்குவதற்காக 28,449 முன்பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றுவதாகத் தகவல் கிடைக்கின்றது. இவ் ஆசிரியர்களில் 99% வீதமானவர்கள் பெண்களாக இருக்கிறார்கள். இதுவரை கிடைக்கின்ற தகவலின் படி கிழக்கு மாகாணத்தில் இருக்கும் கல்முனையில் மட்டும் ஒரு ஆண் ஆசிரியர் இருக்கிறார். இங்கே…

July 25, 2023

’இது என்னுடைய குப்பை இல்லை ஆனால் இது என்னுடைய பூமி’ என்ற வாக்கியத்துடன் கீழே before, after என்று ஓர் நிலக்காட்சி அசுத்தமாக இருந்ததையும், அதைச் சுத்தப்படுத்திய பின்னர் நபரொருவரோ பலரோ போட்டோ ஒன்றை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறோம். நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவ்விடத்திற்கு நான்கைந்து நாட்கள் கழித்துச் சென்று ‘NOW’ என்றொரு படத்தைப் பதிவிட வேண்டும் என்றார். எல்லாத்துறைகளிலும் ‘சமூக சேவை’ என்பது தனிநபர்களையும் சரி, அமைப்புக்களையும் சரி ஒரு வட்டத்திற்கு வெளியே…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’