May 10, 2024

பிற  வாழ்க்கைகள் வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? புத்தகங்களுக்கு நன்றி. நவீன இலக்கியத்தில், வாசிக்கும் போது வேறொரு வாழ்க்கையை வாழ முடியுமா ? அது கனவைப் போன்றதா? அல்லது ஒரு திறந்த உலக வீடியோ கேமைப் போன்றதா ? என்று ஒரு கேள்வி இரவு  இரண்டு மணிக்குக்  கேட்கப்பட்டது.  நான்கு மணிக்குப் பதில் எழுதி விட்டு உறங்கப்போனேன்.  இந்த நாட்களை இவ்வளவு உற்சாகமாக வைத்திருக்கும் அனைவரும் அன்புக்குரியோரே! நவீன இலக்கியத்தின்  சிறப்பியல்புகளில் ஒன்று,  சென்று வாழ்ந்த அனுபவத்தைத் தருவது. எல்லையற்ற…

May 9, 2024

போர்க்காலத்தில் ஏன் நாவல்கள் எழவில்லை?   நாவற்காலம் 02 ஈழத்தில் எழுபதுகளின் பிற்பகுதியில் கூரான இன முரண்களால் எழுந்த  உள்நாட்டு யுத்தத்தோடு ஈழத்தின் நாவல் வளர்ச்சி  மெல்லச் சரிந்தது. பேரியலக்கிய வடிவமான நாவல் முயற்சிகளின்  இச்சரிவின் பின்னால் போர் இருக்கிறதா என்ற கேள்விக்கு  போரும் இருக்கிறது என்ற பதிலே சரியானது என்று நினைக்கிறேன். இச்சரிவை அக்கால சமூக, அரசியல் சூழல் இரண்டு வகையில் பாதித்தது. அதில் முதன்மையானது,   `அரசியல்` நிலைபாடுகள் நாவலின் தேவையை முழுவதுமாக `சமூக…

May 6, 2024

பிணி தீர்ச் சிறுசொல் காலையில் எழும்போதே தடிமன் காய்ச்சல். வெய்யிலைச் சொல்லி நேற்றுப் பழங்களை நிறைய உண்டேன். தர்ப்பூசணி, ஜம்புக்காய், குளிர்த்தண்ணீரை அளவுக்கதிகமாய் குடித்தேன். அதிலெழுந்த விளைவு.  இந்த வெய்யில் எல்லோரையும் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது. வழமையாக நான் இது போல் விசேடமாக வெய்யிலுக்கு என்று எதுவும் உண்பதில்லை. குடிப்பதில்லை. பச்சைத்தண்ணீர் இயல்பிலேயே நிறையகுடிப்பேன். வெய்யில் காலங்களில் அளவு கொஞ்சம் அதிகப்படும். அவ்வளவுதான். முகத்தைப் பற்றியோ தோலைப்பற்றியோ அதன் நிறங்களைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. என்னுடைய கரிய உடல்…

May 5, 2024

விளக்கேந்திய பெருமாட்டி எங்களை ஏற்றி வந்த அம்புலன்ஸ் வண்டி கொழும்பு பெரு நகரின் மத்தியில் இருந்த நூறு வருடங்கள் பழமையான சிறுவர் வைத்திய சாலைக்குள் நுழைந்து கட்டடங்கள் தொடங்கும் இடத்தில் நிறுத்தியது. அம்மாவும் நானும் இறங்கிக்கொண்டோம். காவலாளிகள் எங்களிடம் பதிவுகளை எடுத்தார்கள். அம்மா எனக்கு கொஞ்சம் சிங்களம் தெரியும் என்று அவர்களிடம் சொன்னாள், கூடவே என்னால் வாய் பேச முடியாததையும் சொன்னாள். அவர்கள் இருவரும் சட்டென்று என்னில் கனிவை வரவழைத்துக்கொண்டனர். நான் முதல் முதலில் அருகில் பார்க்கும்…

May 1, 2024

உழவாரப் பணி – நாவற்காலம் -01 ஈழத்தின் நாவல் வளர்ச்சியில் எண்பதுகளுக்குப் பிறகு நிகழ்ந்த நாவல் களத்தை உரையாடலுக்கு எடுக்கிறேன். போரும் வாழ்வுமாக  இருந்த நிலம் இது. குறித்த நாட்களில் எழுந்த  இலக்கியங்களில் கதை வடிவங்களான சிறுகதை, நாவல்  இரண்டையும் விட கவிதை உச்சங்களையடைந்தது. கதை வடிவங்கள்   மிகக் குறைவாகவும் பெரும்பான்மையானவை இலக்கிய அழகியல் குன்றியும் எழுந்தன.  குறிப்பாக நாவல் இலக்கியம், ஏற்கனவே இருந்த  சீரான வளர்ச்சி அப்படியே சரிந்து தடுமாறியது.` நாவற்காலம்` என்ற இத்தொடரில் …

April 28, 2024

சிவப்பில் உறைந்த காலம் வாசிப்பையும் எழுத்தையும்  இராணுவ ஒழுங்கிற்குக் கொண்டு வந்த பிறகு, படங்களைப் பார்பதை வெகுவாகக் குறைத்திருக்கிறேன். மிக மிகத் தெரிவு செய்து;  நண்பர்களின் பரிந்துரைகளை வடிகட்டியே படங்களைப் பார்க்கிறேன். பொழுபோக்குப் படங்களை முழுவதுமாக நிறுத்தி விட்டேன். கடைசியாக ‘பிரம்மயுகம்’ பார்த்தேன். பிடித்திருந்தது.  அனுபவக் குறிப்பொன்று என் journal இல் எழுதி வைத்திருக்கிறேன். விரிவாக எழுத வேண்டும். கொலனியம் பற்றிய ஒரு முக்கிய உரையாடல் அதில் இருக்கிறது. காலம் பற்றியும் வரலாறு பற்றியும் அதில் ஒரு…

April 25, 2024

சராசரிகளின் சந்தை மன்னார், மடுவில் மரியாளுக்கு முடிசூட்டப்பட்டு நூறாண்டுகள் நிறைவதைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். கிளிநொச்சி முழுவதும் அலங்காரத் தோரணங்கள் நீலமும் வெள்ளையுமாக சோடிக்கப்பட்டிருந்தன.  தேவாலயங்களுக்கு முன்னால்  மடுமாதா வருகைக்கான வரவேற்புகள்  பதாகைகள், கோலாகலமாகவிருந்தன. நண்பர் ஒருவருடன் இவற்றைப் பார்த்துக்  கொண்டே காரில் சென்று கொண்டிருந்தேன். தீடிரென்று நண்பர் `உனக்குத்தெரியுமா மடுக்கோவில் இருக்கிறது முதலொரு கண்ணகி அம்மன் கோவிலாம்` என்றான். குரலில் அத்தனை வெறுப்பு. எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்ததென்றால் அவனொன்றும் மத வெறுப்பாளன் கிடையாது. போதாதற்கு அவனுடைய…

April 24, 2024

தும்பி : கசப்பே அண்டாத பரிசு தெரிந்தோ தற்செயலோ இலக்கியத்திலிருந்து சமூக செயற்பாட்டுக்குள் நுழையும் போது எங்களுக்குள் இருந்த குழந்தைகளாலேயே உந்தப்பட்டோம்.  முக்கியமாக இரண்டு கதைப்புத்தகங்களும் ஒரு சிறார் இதழும் எங்களுடைய முன் தெரிவுகளாக  இருந்தன. முதலாவது `குட்டி இளவரசன்`  பெரியவர்களுக்குள் இருக்கும் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட உலகின் மகத்தான கதைகளிலொன்று. நாமெல்லாம் குழந்தைகளாக இருந்தவர்கள் தான் ; சிலருக்கே அது ஞாபகம் இருக்கிறது என்ற  குட்டி இளவரசனின் சொற்கள் எங்களை கைபிடித்துக் கொண்டுவந்தன. அதன் பின் ஆயிஷா. …

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’