March 15, 2024

சில நாட்களுக்கு முன்னர் முக நூலில் பாலியற் சுரண்டல்  குற்றச்சாட்டுகளை  நண்பர் மதுரன் என் மீது  வைத்திருந்தார்.  பல வருடங்களுக்கு முன்பு என்னுடன்  காதலில் இருந்த பெண்ணோடு இருக்கும் போது நான் வேறு பெண்களுடன் பேசிவந்ததாகவும் நண்பர் கிரிசாந் அதைக் கண்டித்ததாகவும்   குறிப்பிட்டு மேற்படி குற்றச்சாட்டு முகநூலில் வைக்கப்பட்டது.  அதன் பின்னரும் பல பெண்களை சுரண்டியதாகவும் பழி சொல்லப்பட்டது.  அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. இன்று வரைக்கும் எந்த ஆதாரமும்  வெளிப்படுத்தப்படவோ  பாதிக்கப்பட்டவர்கள் என்று யாரையும் அல்லது…

February 4, 2024

செம்முகம் ‘சீலன்’  என்று அழைக்கப்படும் சத்தியசீலன்  சமகால  இலங்கைத் தமிழ் அரங்கக் கலைஞர். செம்முகம் ஆற்றுகைக்குழு என்ற பெயரில் அரங்கச் செயற்பாட்டு  வேலைகளை தன்னுடைய குழுவினரோடு முன்னெடுத்து வருகின்றார்.  பல்வேறு அரங்குவடிவங்களையும், பரிசோதனைகளையும், சமூகத்தை முன்னிட்டு மேற்கொண்டு வருகின்றார். அவருடைய இந்த அரங்க வெளிப்பயணம் பற்றியும் அவருடைய கலைசார் நிலைப்பாடுகள் பற்றியும்  பகிர்ந்துகொண்ட உரையாடல் இது. செம்முகம் ஆற்றுகைக் குழுவின் தொடக்கம் மற்றும் அதன் பயணம்  பற்றிப் பகிர்ந்து கொள்ள முடியுமா? செம்முகம் ஆற்றுகைக் குழுவினுடய பயணம்…

December 27, 2023

‘உங்களுடைய படைப்பு உலகத்தரத்தில் இருக்க வேண்டும் என்றால், உங்கள் சொந்தப்பண்பாட்டில் நீங்கள் வேரூன்றி இருக்க வேண்டும்’ என்றார் இயக்குனர்அபாஸ் கிரயோஸ்தமி. இந்திய வணிக சினிமாவின் முன்னால் பண்பாட்டின் களத்தில் நின்று நல்ல படம் எடுப்போம் என்று நிற்பது  முக்கியமான கலைத்துவ முடிவுதான். அப்படியான கலைஞர்களை நோக்கிச்செல்வதே இந்த உரையாடல்களைத் தொடக்க முக்கியமான காரணம்.  இலக்கியத்தில் இருந்துகொண்டு ஏனைய சமகால கலைவடிவங்களுடன் உரையாடிப்பார்ப்பது  அதை எழுத்திற்கு கொண்டுவருவது மெல்ல மெல்லச் செய்தாலும் பயன் பெறுமதியோடு இருக்க வேண்டும் என்று…

November 2, 2023

விசாகேச சந்திரசேகரம் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட விசாகேச சந்திரசேகரம், இலங்கையிலும் அவுஸ்ரேலியாவிலும் பணியாற்றிவருகிறார். நாவல் ,  நாடகவாக்கம் மற்றும் திரைப்படங்களை இயக்கிவரும் ஒரு கலைஞர். சிங்களத்திலும் தமிழிலும் படைப்புக்களை ஆக்கிவருகின்றார்.  இவருடைய இயக்கத்தில் வெளியான Frangipani , Paangshu ஆகிய திரைப்படங்கள் புகழ்பெற்றவை. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றவை. இவருடைய இயக்கத்தில்  இவ்வருடம் வெளியான மணல் என்ற தமிழ்த் திரைப்படம் சமீபத்தில் திரைத்துறையில் புகழ்பெற்ற விருதுகளில் ஒன்றான ரோட்டர்டாமின் (Rotterdam) சர்வதேச திரைப்பட விழாவின்…

September 22, 2023

ஆல்பர் காம்யூ கிரேக்க தொன்மங்களில் ஒன்றான  sisyphus இன் உருவகக் கதையை குறிப்பிடுவார், கிரேக்க புராணங்களின் படி sisyphus கடவுளர்களால் தண்டிக்கப்பட்டவர். அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ஓர் உருளை வடிவப்பாறையை ஒலிம்பஸ்மலைமேலே ஏற்ற வேண்டும்  உச்சிக்கு ஏற்றிய பின் அங்கிருந்து அதை தள்ளி விட வேண்டும். மீண்டும் கீழே வந்து அதை மேலே ஏற்றிச்செல்ல வேண்டும்  மீண்டும் மீண்டும் இடை விடாது இதைச்செய்ய வேண்டும் பசியோ, தாகமோ, மூப்போ , மரணமோ sisyphus க்கு இருக்காது. தொடர்ந்து…

August 26, 2023

நண்பர்களுடன்  யூலை முடிவில் ஒரு வெள்ளிக்கிழமை இரவு கண்டியில் சென்று இறங்கினோம். நீளமாக திட்டமிடப்படாத அதிகம் பணச்செலவற்ற  எக்களுடைய வட்சப் குறூப்பின் பெயரைப்போல அதுவொரு ‘கல்விச்சுற்றுலா’ அவ்வளவுதான். முதலில் கண்டி பிறகு ஹட்டன் மிகுதி எல்லாம் அந்தந்த நேரத்து நியாயம் என்று  விட்டு விட்டு புறப்பட்டிருந்தோம். பொதுப்போக்குவரத்தின் மூலம் பிரயாணப்படுவது என்று திட்டமிட்டிருந்தோம்.  இம்முறை மலையகத்திற்கு செல்வதில் தனிப்பட்டு என்னை ஆர்வப்படுத்தியது மலையக மக்கள் இந்த நாட்டிற்கு தோட்டத்தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்டு இருநூறு வருடங்கள் கடந்திருந்த நிகழ்வுகளும் சமநேரத்தில்…

August 18, 2023

இராவணன்  பற்றிச் சமூக வலைத்தளங்கள் வழியே கட்டமைக்கப்படும் பெருமிதங்களும், தகவல் பிழைகளும் தொடர்ச்சியாக  இணையத்தை மட்டும் தங்களின் அறிதல் வழியாகக் கொண்ட குறிப்பிட்ட அளவு மக்களை வரலாறு, பண்பாடு தொடர்பில் புரிதலற்ற நபர்களாக கட்டமைத்துக்கொண்டிருக்கின்றன. தொன்மங்களாக கருதப்படக்கூடிய புராணங்கள்/ இதிகாசங்களையும், வரலாற்றையும் வேறுபடுத்திக் காணத போது சமூகத்தின் பொது அபிப்பிராயத்திலும் பொதுப்புத்தியிலும் அறியாமையின் அபாயங்கள் கிளைவிடுகின்றன. இலங்கையின் பாராளுமன்றத்தில் ஒரு சிங்கள அரசியல்வாதி இராவணனை சிங்கள மன்னன் என்கிறார். இந்தா நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று தமிழ்…

August 4, 2023

சில வருடங்களுக்கு முன்பு மலையாள/ தமிழ் சினிமா நட்சத்திரமாக நன்கு அறியப்பட்ட நடிகை பார்வதி  தன்னுடைய பெயருக்குப் பின்னால் இருக்க கூட ‘மேனன்’ என்ற சாதியப் பின்னொட்டை இனிமேல் பயன் படுத்த போவதில்லை என்று அறிவித்தததோடு  தன்னுடைய உத்தியோக பூர்வ இணையப்பக்கங்கள், திரைப்படங்களில்  அவற்றை நீக்கினார்.   இந்திய சினிமாவைப் பொறுத்த வரையில் அது  செய்த சிறிய நற்செயல் மட்டுமல்ல அது ஒரு பெரிய காலடி. ஏனெனில் இந்திய  மனங்களை , கருத்தியல் கூட்டை வடிவமைப்பதில் இந்திய சினிமாவின்…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’