பெரிய மன்றாடியாரின் பெயரன் என்று கிழவரிடம் சொல்லுங்கள்` வாயில் காவலரிடம் சொல்லி விட்டு, சுருவத்தடியில் அமர்ந்து கொண்டான் உக்காரா. பணிக்கர் கிழவரின் களரிக்கு அனுமதியில்லாமல் போக முடியாது. தனக்குரிய கனம் பண்ணுகைகளை எதிர்பார்ப்பவர். மன்றாடியாரின் அணுக்கமான சீடப்பிள்ளை என்றாலும், இவனுக்கு அவர் பெரிதாகப் பழக்கமில்லை. சிறுவயதிலேயே தாயுடன் மதவாச்சிக்குச் சென்றுவிட்டான். ஆனால் அவரை பெரிய மன்றாடியாரின் கடைசி நாட்களில் அவரின் சொற்களில் இருந்து அறிந்து கொண்டவன். கால்கள் வலித்தன. செட்டி குளத்தில் உசுப்பிய மோட்டார் சைக்கிளை…