Author Archives: yathaadmin

ராஜகுமாரியின் குதிரை .

yathaadmin/ January 2, 2017/ கதை/ 0 comments

  2002.06.3 விசுவமடு , சோதியா படையணி முகாம். அக்காக்கள் அந்தப்பெரிய பள்ளத்தை நிரவிக்கொண்டிருப்பதைப் பார்த்தபடியிருந்தாள் கெளஷல்யா. அவள் கையில் ஒரு குதிரைப்பொம்மை இருந்தது. தனிமையில் இருக்கும்போது அப்பொம்மையை வைத்தே விளயாடிக்கொண்டிருப்பாள். மாலதியக்கா இருக்கச்சொன்ன தென்னங்குற்றியில் கால்களை காற்றில் உலவ விட்டபடி கையில் குதிரை பொம்மையுடன் ,துர்க்கா அக்கா கொடுத்த கண்டோசைக் கடித்துக்கொண்டிருந்த கெளஷல்யாவைப்பற்றித்தான் கிடங்கை மூடிக்கொண்டிருக்கும் பெண்போராளிகளும் பேசிக்கொண்டிருந்தனர். “கெளசின்ர அப்பா நேற்றும் தாய்க்கு அடிச்சுப்போட்டாராமடி ” “அந்தாள விதுசாக்காட்ட சொல்லி ஒருக்கா கூப்பிட்டு வொன் பண்ணிவிடோணும்” “கெளசி அழுதவளோ ?” “ஓம்

Read More

ஈழத்து சினிமா – கருத்தியல்களும் வரையறைகளும் (நிகழ்படம் , கரவொலி பற்றிய குறிப்புக்கள் .)

yathaadmin/ November 15, 2016/ கட்டுரை/ 0 comments

    ஈழத்து சினிமா – கருத்தியல்களும் வரையறைகளும் நிகழ்படம் , கரவொலி பற்றிய குறிப்புக்கள் . எமக்கான அடையாளங்களை உருவாக்குதல் என்பதும் , எமக்கான கலையம்சங்களை இந்திய – தமிழ்நாட்டுச் சூழலில் இருந்து விலகி நின்று உரையாடல் என்பதுமே இன்றை ஈழத்து கலை இலக்கிய செயற்பாடுகளின் வேண்டப்படும் அம்சமாகும் . சுயாதீனமான ஓவியக்கண்காட்சிகள் , திரைப்படத்திருவிழாக்கள் , இசை நிகழ்வுகள் , இலக்கிய செயற்பாடுகள் , வடிவமைப்பு -பதிப்புதுறையின் சுயாதீன வளர்ச்சி , இதழியலின் வளர்ச்சியென்று சமகாலத்தில் இந்திய – தமிழ்நாட்டு சூழலில்

Read More

நண்பர்களுக்கான குறிப்புகள்.

yathaadmin/ October 31, 2016/ கட்டுரை/ 0 comments

  நண்பர்களுக்கான குறிப்புகள்.   இன்று மதியம் வரை நடந்து முடிந்த மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின் போராடட்டம் பற்றிய அழகியல் பூர்வமான வர்ணனைகளையோ சொல்லாடல்களையோ பயன்படுத்தி ஒரு கட்டுரை வடிவத்தில் நானிதை பதிவு செய்யும் மனநிலையில் இல்லை.எனினும் சிலதை பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரு வேளை நாட்டின் எல்லா நீதிக்கோரிக்கைகளைப்போலவும் இப்போராட்டம் நமத்துப்போனாலோ அல்லது தோற்றுப்போனாலோ அதற்கான முற்று முழுதான காரணமாக நாம் தான் இருக்கப்போகின்றோம் என்பதை நான் என்னுடைய பல்கலைக்கழக சகோதரர்களுக்கு மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

Read More

ஏவாளின் புரவி

yathaadmin/ October 29, 2016/ கதை/ 0 comments

    ஆதாம் கடவுளிடம் மன்னிப்புக்கோரி ஒரு கடிதத்தை எழுதி முடித்திருந்தான். அன்று காலையில் தன் பிரியமான புள்ளிமான்களில்  தொடைகளில் அதிகம் சதைப்பிடிப்பான, அதிக தூரம் பயணிக்க தகுந்த  தெரிவு செய்து ,அதன் கழுத்தில்  மன்னிப்பு கோரிய கடிதத்தை கட்டி வடக்கு புறமாக அதனை தட்டிவிட்டான். அது செல்வதை  குன்றொன்றின் மீது ஏறி நின்று பார்த்தபடியிருந்தான். அப்போது அவனுக்கு பின்னால் கனைப்புச்சத்தம் கேட்டது திரும்பிப்பார்த்தான். “ம்” கம்பீரமாக நின்றிருந்தது. ”ம்”ஒரு பெண் குதிரை , அப்பளுக்கற்ற  வெள்ளைத்தேகம்  , காற்றை வருடிக்கொடுக்கும் நீளமானதும் மிக

Read More

ஹர்த்தால் – விடுமுறையைக் களித்த படி போராடுதல்

yathaadmin/ October 27, 2016/ கட்டுரை/ 0 comments

ஒரு தேசம் உற்பத்தி செய்த போராட்ட வடிவங்கள் , அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகள் அந்ததந்த தேசங்களின் அரசியல் , புவியியல் மற்றும் சமூகபொருளாதார நிலைமைகளுக்காக உருவானவையாகவே இருக்கும். குறிப்பாக உள்நாட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த நாட்டின் குழுக்களுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ காலத்தின் தளத்தில் நின்று உதவுகின்றன. இந்திய பெருந்தேசத்தில் காலனித்துவத்தின் போதுகடைப்பிடிக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் காலனித்துவத்தின் அரசியல் பூர்வமான அகற்றலில் பெரும் பங்காற்றின. எனினும் காலனித்துவத்தின் சமூக ,பொருளாதார , பண்பாட்டு தாக்கங்களையும் தொடர்ச்சியையும் இந்திய எதிர்ப்புக்கள் அகற்றுவதில் தோல்வி கண்டன அல்லது குறித்த

Read More

நாவல் பழக்கதை (version 2.0)

yathaadmin/ September 11, 2016/ கட்டுரை/ 0 comments

நான் ஒரு நாவல் பழ பிரியன். சிறுவயது முதல் நாவல் பழத்தின்ர சுவை நாக்கில ஒட்டிக்கொண்டு இண்டைக்குவரைக்கும் குறையாமல் இருக்கு. இது நேசறியில் ஆரம்பித்தது , சிறுவயதில் கரு கருவென நாவல் பழம் மாதிரி இருப்பன் எண்டு அம்மா சொல்லுவா , நேசறிக்கு போகேக்க தெருவில இருக்கிற  எல்லா பிள்ளையளோடவும் நேசறிக்கு நடந்து போவன். நாங்கள் போறவழியெல்லாம் அதிகம் நாவல் மரங்கள் இருக்கும், நாவல் பழ சீசன் தொடங்கீட்டு எண்டா போகும் போதும் வரும் போதும் பழம் பொறுக்கியே நேரம் போய்விடும். பள்ளிக்கூடம் போனால்

Read More

நல்லூர் – யாழ்நிலத்தின் அடையாளமாக உருவாதல்

yathaadmin/ August 25, 2016/ கட்டுரை/ 0 comments

(ஒரு நிலத்தின் அடையாள உருவாக்கம் என்பது மக்களின் வாழ்வியலை அசைக்கின்ற  முக்கிய பங்கைனை ஆற்றுகின்றது. நம்பிக்கை , பண்பாடு , அரசியல் ,சமயம் , பொருளாதாரம் , கலை  என்று பல உட் கூறுகள்  புரையோடி உருவாக்கும் ஒவ்வொரு அடையாளமும் மக்களின் பெயரால் சமூக அசைவுக்கு துணைநிற்கின்றன. அவ்வகையில் குறுங்காலத்தில்  ஓர் தன்னை அடையாளமாக மாற்றிய  அல்லது மாற்றப்பட்ட நல்லூர் பற்றிய அடையாள உருவாக்க  வாசிப்பை இக்கட்டுரை செய்ய முற்படுகின்றது.) ஆவணிமாதத்தின் முதற்பகுதியில் வீடுகளில் மச்சத்தையும் புலாலையும் நிறுத்த தொடங்குவர். நல்லூர்க் கோயிலைச் சுற்றி

Read More

பிரபாகரனின் மீசை

yathaadmin/ August 15, 2016/ கட்டுரை/ 2 comments

காலையில் அம்மா தாடி மீசையை எடு என்று நச்சரிக்கா விட்டால் இதை எழுததொடங்கியிருக்கவே மாட்டேன். அத்துடன் மேற்படி தலைப்பு நீங்கள் இந்த பத்தியைப் படிக்கத்தொடங்குவதற்காகவும் எனக்கு பிடித்த  ஒரு முக்கிய மீசைக்காரனின் மீசையின் பெயரில்  பத்தியைத் தொடங்கும் சுய ஆசையினாலும் இடப்பட்டிருக்கிறது. . YES…… மீசை , தாடியைப்பற்றிதான் நானும் நீங்களும் இங்கே உரையாடப்போகிறோம். பிரபாகரன் மீசையைப்பற்றி பத்தியின் இறுதியில்தான் உரையாடப்போகின்றோம் என்பதால்  கடைசிவரை படிப்பீர்கள் என்பது என் நப்பாசை. மீசையையும் தாடியையும்  ஒரு கலாசாரமாகவோ , கலைவடிவமாகவோ அழகுணர்வோடு  பார்த்த  ,பார்க்கின்ற உலகச்சமூகத்திலிருந்தும் 

Read More

பசியோடு அலைபவர்களும் நீர்நிலைக்கதைகளும்.

yathaadmin/ July 29, 2016/ கட்டுரை/ 0 comments

நேற்று காலையில் வீட்டிற்கு வந்து தனுஷ் என்னை ஏற்றும் போதே கைதடிக்கு போய்விட்டு போகவேண்டும் என்றான். சரியென்று தலையாட்டிவிட்டு ஏறிக்கொண்டேன். காலையில் அலுவலகம் போக எடுக்கும் அந்த 45 நிமிடங்களில் ஓயாமல் ஏதாவது  அலட்டிக்கொண்டும் பாடிக்கொண்டும் போவோம் , வரும் போதும் அப்படித்தான்.  தனுசுடனான பெரும்பாலான அரட்டைகளில்  இலக்கியம் , சினிமா , அரசியல் என்று ஓடிக்கொண்டே இருக்கும்.  தனுஸ் ஒரு தீவிர வாசகன் , சினிமா இரசிகன்  அதுவும் அவன்  பேச்சில் எப்போதும் மலையாள வாசம் அடிக்கும் .  என்னுடைய நண்பர்களில் மலையாளம்

Read More

களனிப் பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு கடிதம்

yathaadmin/ July 20, 2016/ கட்டுரை/ 0 comments

Dear Brother, I am an undergraduate from the University of Kelaniya, haling from Colombo. I am deeply disturbed by what I saw and heard regarding the situation in the University of Jaffna. It is one of the most prestigious universities in Sri Lanka which underwent difficulties at the time of the war. However, it is high time to restructure and

Read More

அன்புள்ள பல்கலைக் கழக தோழர்களுக்கு என்ற கட்டுரையின் சிங்கள ஆக்கம்

yathaadmin/ July 19, 2016/ கட்டுரை/ 0 comments

‘‘එකම පන්තියේ අපි ගල් ගැසිය යුත්තේ කාටද?‘‘ – යාපනය සරසවියෙන් ලියුමක්   ආදරණීය විශ්ව විද්‍යාල සහෝදරවරුනි, පසුගියදා  යාපනය විශ්වවිද්‍යාලයයේ සිදු වූ සිද්ධිය සහ ඊට අදාළ පුවත් සම්බන්ධව ද කිසිදු කතාබහකට මා අකැමතිය . පොලු ගත්තෝය, ගල් ගැසුවෝය, තුවාල සිදුවිය ,පොලීසිය පැමිණියේය , සිංහලය දමිළය කියා ජනතාව කුපිත කර වර්ණනා කරන සියලු මාධ්‍යවලට පිටතින් සිටීමට මම කැමැත්තෙමි. මේ අවස්ථාව අප සාකච්ඡා කළ යුතු මොහතකි

Read More

அனைவரும் இரண்டு மொழியையும் கற்க வேண்டும்!- அப்பொழுது தான் ஒரே குரலில் பேச முடியும்

yathaadmin/ July 18, 2016/ கட்டுரை/ 0 comments

கருத்தியல் ரீதியில் பல்கலைக்கழக முரண்பாட்டை புரிந்து கொள்ளுதல் • இனத்துவ அடையாளமும் தேசியவாதமும் 1891 இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 79 இனங்கள் இருப்பதாக கணக்கு உண்டு. அவற்றின் மூலம் “கலப்பு” இனம் சார்ந்த எண்ணிக்கை தான் மொத்தமும். “தூய” என்று எதுவும் இருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. ஆகவே தேசியவாதமும் இனத்துவ அடையாளமும் இங்கே மறைந்து விட்டது. இது ஒரு அரசியல் சார்ந்த இனத்துவ ஒழுங்குருவாக்கம். அதன் வெளிப்பாடுகளை சமூக வலைத் தளங்களில் நிகழும் வேறுபட்ட கதையாடல்கள் மூலம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்

Read More

பல்கலைக்கழக முரண்பாடு – பொதுமக்கள் ஏன் நிலைப்பாடு எடுக்க வேண்டும் ?

yathaadmin/ July 18, 2016/ கட்டுரை/ 0 comments

  இந்தக் கட்டுரைக்கு முன் சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும். நான் பல்கலைக் கழக மாணவனல்ல, இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பொதுவாகவே பல்கலைக் கழகத்தில் படிக்காதவர்கள், வெளியாட்கள் பல்கலைக் கழகம் தொடர்பில் கருத்தையோ அல்லது அபிப்பிராயத்தையோ எந்த ஒரு விடயத்தில் சொல்லும் போதும், முன்னாள் மற்றும் இந்நாள் பல்கலைக் கழக மாணவர்கள் எதிராகவே பார்ப்பார்கள். தங்கள் வீட்டிற்குள் நீங்கள் வரத் தேவையில்லை என்று சொல்லுவார்கள். படித்தால் தான் உங்களுக்குத் தெரியும் என்பார்கள். ஆகவே அதன் நடைமுறைகள் தொடர்பில் பிறர் (தமது மொழிபேசுபவர்கள் கூட)

Read More