Monthly Archives: April 2019

கோளறு பதிகம்

yathaadmin/ April 14, 2019/ கதை/ 0 comments

    வெரோனிக்கு தண்டனைக்காலத்தின் இரண்டாவது மாதம். மெடிக்ஸ் பேசில் சிலநாட்களாக அவளுடைய முகம் அடிக்கடி தட்டுப்பட்டது. புதிதாக வந்திருக்க வேண்டும். அவள் பார்வையிலும் உடலசைவுகளிலும் சரியான துடுக்குத்தனம்.”சரியான வாய்” என்று பரவலாக அவளைப்பற்றி அபிப்பிராயம்.  ஆனாலும் டக்கென்று ஒட்டிவிடுபவள். நான்கைந்து நாட்களாக அவளுடயை கண்கள் தன்னைக்கவனிப்பதை உள்ளுணர்ந்தாள் வெரோனிக்கா. எல்லோரிடமும் இருந்து ஒதுங்கியே இருக்க நினைத்திருந்தாள். யாரிடமும் பெரிதாகப்பேச்சுக்கொடுப்பதில்லை. கேட்ட கேள்விக்குமட்டும் பதில்.  யாரும் எதுவும் கேட்பதில்லை.பொறுப்பாளர் மட்டும் அழைத்து வேலை சொல்லுவாள். அல்லது அறிக்கை பற்றி ஏதாவது கேட்பாள். மற்றபடி மெடிக்ஸ்

Read More