Monthly Archives: January 2017

ஈழத்தின் ஜல்லிக்கட்டுக்கோசங்களை ஏன் எதிர்க்கிறேன்?

yathaadmin/ January 23, 2017/ கட்டுரை/ 0 comments

  மொழி அபிமானம் , தேச அபிமானம் , இன அபிமானம்  இல்லாது இருப்பதே ஈடேறுவதற்கான வழி. -பெரியார் – மேற்படி பெரியாரின் கருத்து நிலையில் இருந்தே நான் என்னுடைய வாதத்தை தொடங்க நினைக்கிறேன்.  உண்மையில் எனக்கு என்னுடைய மொழியையை அதுசார்ந்த அடையாளங்களையோ , இனத்தைச் சார்ந்த அடையாளங்களை கண்டறியவும் , அதன் தனித்தன்மைகளை ஆராயவும் அது பற்றி எழுதவும்  அவற்றை பாதுக்காக செயல்களை உருவாக்கவும் இருக்கும்  காரணம் , என்னுடைய சமூகம் இன்னொரு சமூகத்தின் பலம் மிக்க குழுவொன்றால் அடக்கப்படுகின்றது , சுரண்டப்படுகின்றது

Read More

ஈழத்து மடப்பண்பாட்டில் நின்று தெருமூடிமடத்தின் இருப்புநிலையை வாசித்தல்.

yathaadmin/ January 20, 2017/ கட்டுரை/ 0 comments

      நாம் வரலாற்றின் விளிம்பு நிலை குழுமத்தினராகவே உள்ளோம். வரலாற்றுத்தொடர்ச்சியை மீளக் கட்டவேண்டிய தேவைகளை தொடர்ச்சியாக உணர்கிறோம். அதன் பொருட்டு மிச்சமிருக்கும் மரபுகளையும் தொல்லியல் கையளிப்புக்களையும் அறியவும் ஆவணப்படுத்தவும் அடுத்த சந்ததிக்குக் கையளிக்கவும் வேண்டியுள்ளது. மிகக்குறைவாகக்கிடைக்கும் மரபார்ந்த தொல்லியல் பண்டங்களை வைத்துக்கொண்டு, அவற்றைத் தொடர்புபடுத்தி அதனைச் சூழ அமைந்த வரலாற்றினை உருவாக்குதல் என்பது ஒரு புனைவைப்போல் முன் வைக்கக் கூடியதல்ல. அது எல்லாவகை வரலாற்று மூலாதாரங்களின் கூட்டு மொத்தத்தின் ஊடாக கட்டியெழுப்பப்படுதலே அரோக்கியமானது. ஈழத் தமிழ்ச் சமூகத்தினைப் பொறுத்தவரையில் வடக்குப்பகுதி வரலாற்றின்

Read More

Pan’s Labyrinth – மந்திரக் கதவின் ஊடாக போரிலிருந்து வெளியேறுபவனின் குறிப்பு

yathaadmin/ January 6, 2017/ கட்டுரை/ 0 comments

  என்னுடைய    சிறுவயது முழுவதும்  மாயாஜால கதைகளாலும் , வீரசாகசக் கதைகளாலும் நிரப்பப் பட்டதாகவிருந்தது . இன்று வரை அவற்றின் தாக்கத்தில் இருந்து மீண்டுவரமுடியாமல் இருக்கிறேன். சிறுவயதின் ஒரு பாகத்தை மேற்கத்திய சாகசக்கதைகளான ராபின்ஹீட் , அலிஸ் இன் வொண்டர்லாண்ட் , கலிவரின் பயணங்கள் , ரொபின்சன்  குருசோ தொடங்கி  பழைய கிரேக்க தொன்ம சாகசக்கதைகளான , ஹர்குலிஸ் ,தீஸியஸ் , ஜேசன் , போன்றனவும்  பின் வந்த குளோனிக்கல் ஒவ் நார்னியா  தொடர் நாவல்களும் , ஹாரிபொட்டர் நாவல்களும் பிடித்துக்கொண்டன. கூடவே மாயவி

Read More

ராஜகுமாரியின் குதிரை .

yathaadmin/ January 2, 2017/ கதை/ 0 comments

  2002.06.3 விசுவமடு , சோதியா படையணி முகாம். அக்காக்கள் அந்தப்பெரிய பள்ளத்தை நிரவிக்கொண்டிருப்பதைப் பார்த்தபடியிருந்தாள் கெளஷல்யா. அவள் கையில் ஒரு குதிரைப்பொம்மை இருந்தது. தனிமையில் இருக்கும்போது அப்பொம்மையை வைத்தே விளயாடிக்கொண்டிருப்பாள். மாலதியக்கா இருக்கச்சொன்ன தென்னங்குற்றியில் கால்களை காற்றில் உலவ விட்டபடி கையில் குதிரை பொம்மையுடன் ,துர்க்கா அக்கா கொடுத்த கண்டோசைக் கடித்துக்கொண்டிருந்த கெளஷல்யாவைப்பற்றித்தான் கிடங்கை மூடிக்கொண்டிருக்கும் பெண்போராளிகளும் பேசிக்கொண்டிருந்தனர். “கெளசின்ர அப்பா நேற்றும் தாய்க்கு அடிச்சுப்போட்டாராமடி ” “அந்தாள விதுசாக்காட்ட சொல்லி ஒருக்கா கூப்பிட்டு வொன் பண்ணிவிடோணும்” “கெளசி அழுதவளோ ?” “ஓம்

Read More