yathaadmin/ August 25, 2016/ கட்டுரை/ 0 comments

06_fmt

(ஒரு நிலத்தின் அடையாள உருவாக்கம் என்பது மக்களின் வாழ்வியலை அசைக்கின்ற  முக்கிய பங்கைனை ஆற்றுகின்றது. நம்பிக்கை , பண்பாடு , அரசியல் ,சமயம் , பொருளாதாரம் , கலை  என்று பல உட் கூறுகள்  புரையோடி உருவாக்கும் ஒவ்வொரு அடையாளமும் மக்களின் பெயரால் சமூக அசைவுக்கு துணைநிற்கின்றன. அவ்வகையில் குறுங்காலத்தில்  ஓர் தன்னை அடையாளமாக மாற்றிய  அல்லது மாற்றப்பட்ட நல்லூர் பற்றிய அடையாள உருவாக்க  வாசிப்பை இக்கட்டுரை செய்ய முற்படுகின்றது.)

ஆவணிமாதத்தின் முதற்பகுதியில் வீடுகளில் மச்சத்தையும் புலாலையும் நிறுத்த தொடங்குவர். நல்லூர்க் கோயிலைச் சுற்றி கொடிக் கம்பங்கள் முளைக்கும், நல்லூர்ச் சூழலின் குறுக்கே ஓடும் சாலைகளில் தற்காலிக தெருமூடி மடங்களும் தண்ணீர் பந்தர்களும் நிர்மாணிக்கப்படும்.வெள்ளைக்கார தோல்களும் வெளிநாட்டு மக்களும் நகரெங்கும் உலவ ஆரம்பிப்பர். கோயில் சூழலில் குளிர்ந்த மணல் இறைக்கப்படும். ஏற்கனவே பளிச்சென்று இருந்த கோயில் இன்னும் ஒளிகொள்ளும். உணர்வு தொடங்கும். கொடிச்சீலைகள் ஆலய வளாகத்தை சிவப்பு வெள்ளை பாம்பைப் போல் சுற்றி எழ, ‘அரோகரா’ ‘அரோகரா’ தான், ரியோவும் லிங்கமும் புதுப்பொலிவாகும். சின்னச் சின்ன கடைகள் கட்டப்படும். நான்கு கரையும் மணல் பரவும். மெல்ல மெல்லச் சனம் திரளும். முதல் நாள் மாலை வீதிகள் மூடப்படும். கற்பூர வாசமும் சாம்பிராணி நறுமணமும் அந்தத் தேசமெங்கும் வீசிக்கொண்டே இருக்கும். உள்ளே வந்தால் “கந்தா! கந்தா!” என்று மனம் துள்ளும். குங்கும சந்தன திருநீற்று வாசனை கரை புரளும் தெருவெல்லாம் கதைபேசி மக்கள் அலையும் பொழுது மீண்டும் அந்த நாட்கள் வரும், பழையன போலவே, ஒன்றாய் வாழும் ஒரு வாழ்வு. ஒரு திரு விழா அத்தனை அழகாகத் தொடங்கும். கடந்த முப்பது வருடங்களில் போரினுள் உழன்ற ஒரு சமூகத்தின் கொண்டாட்டம் ஒரு பெரும் பக்திப்பரவசத்துடன் ஆரம்பமாகும்.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை வரலாற்று அல்லது மரபார்ந்த ரீதியில் யாழ் சமூகத்தை பிரதிபலிக்கும் ஏராள மான தொன்மங்களையும், கட்டடகலை அம்சங்களையும் கண்டுபிடிக்கலாம். அவ்வகையில் தற்பொழுது நல்லூர் கந்தசுவாமி கோயில் யாழ்ப்பாணத்தின் அடையாளங்களுள் ஒன்றாக உருவாகி வந்துள்ளது. இது எவ்வாறு நிகழ்ந்தது? அது சுவாரஸ்யமானதொரு வளர்ச்சி. அந்த வளர்ச்சியில் கொண்டாடத்தக்க நிகழ்வுகள் நடந்தன. விமர்சிக்கத்தக்க கதைகள் உருவாகிவந்திருக்கின்றன.

எழுத்துருக்களில், ஊடகங்களில், சமூகவலை அமைப்புகளில் எல்லாம் நல்லூர் யாழ்ப்பாணத்தின் அடையாளமாக மாறிவிட்டது. உதாரணமாக இணையத்தில் யாழ்ப்பாணம் என்று தேடும் போது அது நல்லூரின் படத்தையே முதன்மையாக காட்டுகின்றது. அதைப் போல சமீபத்தில் இலங்கை அரசு வெளி யிட்ட பத்து ரூபாய் குற்றியில் யாழ். மாவட்டத்தை பிரதிபலிக்கும் வண்ணம் நல்லூர் கோவிலே பொறிக்கப்பட்டுள்ளது.பொது நிகழ்வொன்றிற்கான அழைப்பி தழ்களில் கூட நல்லூரைக் கொண்டே யாழ் குடாவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இத்தகைய அடையாள உருவாக்கம் எப்படி நடந்தது என்பதும், அது எவ்வாறு தற்பொழுது வேகமெடுத்து நிலைத்துள்ளது என்பதும் கடந்தகால யாழ்ப்பாணப் பண்பாட்டின் வளர்ச்சியூடே பார்க்கலாம்.
இந்துக் கோயிலான நல்லூர், முருக வழிபாடு சேர்ந்ததாகும். யாழ்ப்பாணத்தின் ஆரம்ப வரலாற்றினை எடுத்துப் பார்த்தால் பண்டைக்காலம் தொட்டு முருக வழிபாடு இருந்ததற்கான சான்றுகளைப் பெறுவது அரிதாகவுள்ளது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை முருக வழிபாடு என்பது மூன்று பெருங் கோயில்கள் சார்ந்ததாக இருக்கிறது. மாவிட்டபுரம் கந்தன், செல்வச்சந்நிதி முருகன், நல்லூர்க் கந்தன். இவர்கள் மூவரில் மூத்த முருகர்கள் அல்லது பெரியளவில் வழிபாட்டு சடங்குகளுக்குள் இருக்கும் முருக ஆலயங்களாக மாவிட்ட புரத்தையும், சந்நிதி முருகனையும் குறிப்பிடலாம்.
இலங்கை சிவ வழிபாட்டை கொண்ட இடம். ஆனால் யாழ்ப்பாணப் பண்பாட்டை கந்தபுராணப் பண்பாடு என்று தான் குறிப்பிடுவர். இந்த வழக்கு இந்திய பல்லவர் காலத்தில் ஏற்பட்ட செல்வாக்கினோடு வட பகுதிக்குள் நுழைந்திருக்க கூடும் என வரலாற்றா#வாளர்கள் குறிப்பிடுகின்றனர். யாழ்ப்பாண வரலாற்றை கூறத்தக்க சொற்ப நூல்களுள் ஐரோப்பிய காலனித்துவ காலத்திற்கு அண்டியதாக எழுதப்பட்ட சில நூல்களே முருக வழிபாடு பற்றிய தகவல்களைத் தருகின்றன. தவிர நல்லூர் என்ற இடம் வடபுலத்தின் தலை நகராக இருந்ததாக அல்லது வட புலத்தின் கேந்திர முக்கியமாக இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன. ஆனால் வரலாற்று ரீதியில் நல்லூர் முருக வழிபாடு என்பது பற்றி உறுதிப்படுத்தப்படுவதில் பெரும் குழப்பங்கள் இருக்கின்றன. எனினும் யாழ்ப்பாண பண்பாட்டு வரலாற்றில் முருகவழிபாடு தவிர்க்க முடியாததாக இருந்து வருகின்றமையை மறுக்க முடியாது.

யாழ்ப்பாண முருக வழிபாட்டில் மாவிட்டபுரம் முருகன் கோவில் ஒரு காலத்தில் பெரியளவிலான அமைப்பினையும் கொண்டாட்டத்தையும் கொண்டிருந்தது. காவடிக்கந்தன் என்றுசொல்லப்படும் இம் முருகன் கோவில் 1900 களிலேயே பெரும் கோபுர அமைப்புடன் சேர்ந்த சமூகத்தின் வழிபாட்டு இடமாகக் காணப்பட்டுள்ளது. எனினும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண இன ஆக்கிரமிப்பும் இராணுவகால் தடங்களின் வருகையும் மாவிட்டபுரம் முருகன் கோவிலைச்சூழ இருந்த பிரதேச மக்களை விரட்டியடித்தது. அதன் பின்னர் கோவில் பொலிவிழந்து போனது. அதாவது யாழ்ப்பாணத்தின் பெரு வழிபாட்டு தலங்களுள் ஒன்றாகவும் கொண்டாட்ட தளமாகவும் இருந்தது. அது பொலிவிழந்து போனது யுத்த வடுவின் இன்னொரு அடையாளம் அல்லது சாட்சியமாகும்.

அதனைப்போல அன்னதானக்கந்தன் எனப்படும் செல்வச்சந்நிதி முருகனும் கிராமிய நிலை சார்ந்து அதிக மக்கள் கூடும் ஒரு கோயிலாகவும் இருக்கின்றது. அதன் கொண்டாட்டம் நகரத்தில் இருந்து அதிகம் விலகிய ஒன்றாகவும் இருக்கின்றது.
இவ்விரு கந்தர்களும் கொண்டாட்டம், திருவிழா சார்ந்து நீண்டதும் மூத்ததுமான பண்பாட்டு வரலாற்றைக் கொண்டவர்கள்.
எனினும் ஐரோப்பிய காலணித்துவத்தின் பின்னர் அல்லது காலணித்துவ காலத்திலேயே நல்லூர் கோவில் பற்றிய தகவல்கள் மெல்ல வெளித்தெரிகின்றன. தனியார் கோவிலாக இருந்த நல்லூர் இந்து மரபின்செல்வாக்கினால் வளர்ந்துள்ளது. எழுபது எண்பதுகளை சேர்ந்த தலைமுறையினர் நல்லூரைச் சிறிய ஊர்க்கோவிலாக இருந்த நிலையையே அதிகம் நினைவு கூருகின்றனர். ஒப்பீட்டளவில் பார்த்தால் தற்போது இருக்கும் நல்லூரின் அமைப்பும் அதன் வளர்ச்சியும் குறுகிய கால வரலாற்றையே கொண்டிருக்கின்றன.

பதினாறாம் நூற்றாண்டிற்கு நெருக்கமாக கோட்டை இராசதானியை சேர்ந்த செண்பகப்பெருமாள் என்ற யுவராசன் யாழ்ப்பாணத்தை நிர்வகித்த போது நல்லூர்கோயிலுடன் நெருக்கமான தொடர்பினை கொண்டிருந்ததாக வரலாற்று ஏடுகள் சொல்கின்றன. அதற்கு ஆதாரமளிப்பது போல் நல்லூர் கட்டியத்தில் இன்றும்செண்பகப்பெருமாளின் பெயர்சொல்லிப்பாடும் வழமை காணப்படுகின்றது. இந்த வகையில் ஆட்சியாளர்கள் அல்லது அதிகார மட்டத்தினர் நல்லூருடன் கொண்டிருந்த செல்வாக்கு அதன் அடையாள உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தது எனலாம். குறிப்பாக நல்லூர் யாழ்பாண மேட்டுக்குடி இந்துக்களின் நெருக்கமான இஸ்தலமாக கருதப்பட்டமை நல்லூரை யாழ்ப்பாணத்தின் அடையாளமாக மாற்றுவதில் செல்வாக்குச் செலுத்தியது. போர்த்துக்கேயர் காலத்தில் இக்கோயில் இடிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அத்தோடு நல்லூரை சுற்றி இருக்கும் பகுதிகளில் நாலு திசைகளிலும் சட்டநாதர் கோயில் , கைலாய பிள்ளையார் கோயில் , வீரமா காளியம்மன் கோயில் , பூதவராயர்
கோயில் போன்றன நல்லூர் கோயிலோடு கொண்டிருந்த தொடர்புகளும் ஒரு குறித்த வலையமைப்பின் ஊடாக நல்லூரை அடையாளமாக மக்கள் நம்பும் படி செய்தது.
எனினும் தற்பொழுது இருக்கும் கோயிலுக்கும் தொல்லியல் -வரலாற்று ஆ#வாளர்கள் குறிப்பிடும் கோவிலும் வெவ்வேறானவை என்றே சொல்லப்படுகின்றது . கிட்டு பூங்காவிற்கு சமீபமாக இருக்கும் கிறிஸ்தவ தேவாலயத்தின் இடத்திலேயே பழைய நல்லூர் முருகன் கோவில் இருந்ததாக சான்றுகள் சொல்லப்படுகின்றன. அத்தோடு தற்பொழுது இருக்கும் நல்லூர் கோவில் இஸ்லாமிய சூபி வழிபாட்டுடன் தொடர்புகளை கொண்ட இடமாக இருந்ததான நம்பிக்கைகளும் உலவுகின்றன. இந்த வரலாறு சார்ந்த விவாதங்களும் நல்லூர் ஒரு பெரும் அடையாளமாக உருவாகத் துணைநின்றதென்றும் கருத இயலும்.

சித்தர்கள் என்று சொல்லப்படும் செல்லப்பா சுவாமிகள் , யோகர் சுவாமிகள் போன்றோர் நல்லூர் கோவில் சூழலிலேயே தங்கள் வாழ்கையைக் கழித்துள்ள தகவல் கள் கிடைக்கின்றன. அத்தோடு நாவலர் போன்ற யாழ்ப்பாண சமூக அரசியல் சமய பகைப்புலத்தில் செல்வாகுடன் இருந்த முக்கியஸ்தர்களும் நல்லூரை கொண்டாடவும் , நல்லூரை தம் வெளிப்பாடுகளில் முதன்மைப்படுத்தவும் முனையும் போது வரலாற்று ஓட்டத்தில் நல்லூர் தவிர்க்க முடியாத இடத்தினைப் பெறுகின்றது . நல்லூர் கோவிலைச் சார்ந்தவர்களுக்கும் , கைலாச பிள்ளையார் கோவைலைச்சார்ந்த ஆறுமுக நாவலர் போன்றோருக்கும் நடந்த முரண்பாடுகள் , சண்டைகள் இன்றும் இலக்கிய காரர்களிடமும் , சமூக ஆர்வலர்களிடையேயும் ஏன் சாதாரண மக்களிடையேயும் விவாதிக்கப்படுவதுண்டு.
மேலும் நல்லூரின் ஆலயச்சூழல் என்பது சமூக அமைப்பில் மேட்டுக்குடிகள் என்று சொல்லப்படும் சமூகத்தினரை ஆரம்பத்தில் கொண்டிருந்தது. அத்துடன் சமூக அமைப்பில் கோவிலுடன் தொடர்பு பட்ட குடிகள் முக்கிய பங்கினை ஆற்றினர் இதுவும் நல்லூரின் அடையாளத்தை வலுப்பெறச்செய்தது. எழுபதுகளில் நல்லூர் சூழலில் ஆலயச்சூழல் சார்ந்த மக்கள் தங்களை கோயில் சார்ந்த தனி அடையாளத்தினர் என்று காட்ட முனைந்துள்ள தகவல்களையும் கதைகளையும் கேள்வியுற முடிகின்றது. உதாரணமாக அக்காலத்தில் நல்லூர் கோவில் சார்ந்த மேட்டுக்குடி என்று தம்மை அடையாளம் செய்யும் குறிப்பிட்ட சமூகம் சார்ந்த பெண்கள் சேலை உடுத்திருக்கும் முறைகளில் கூட தங்களை வேறு படுத்தி காட்டியுள்ளனர். குறிப்பாக அவர்களுடைய முந்தானையை சுற்றி கட்டும் போது அதன் நீளத்தை அதிகரித்து அணியும் பழக்கத்தைக் கொண்டிருந்தனராம் . இவை போன்ற குறித்த வர்க்கம் சார்ந்த நம்பிக்கை மூட நம்பிக்கை மற்றும் அதிகாரம் சார்ந்த கதைகளும் உரையாடல்களும் நல்லூரின் அடையாள உருவாக்கத்தில் முக்கிய கதாநிலைகளை வகிப்பதை மனதில் கொள்ளுதல் வேண்டும்.
இந்த ஓட்டம் ஐரோப்பிய காலணித்துவம் நீங்கப்பெற்று சுதேச ஆட்சி முறை வந்ததன் பின்னரும் நல்லூரை முக்கிய தலமாகவே வைத்திருந்தது, நல்லை ஆதீனம் , மடம் என்பவற்றின் இயக்கம் , இந்து நிறுவனங்களின் செயற்பாடு , நல்லூரின் நிர்வாக அமைப்பு உருவாக்கம் என்பன பக்தி என்பதையும் தாண்டி ஒரு மரபடையாளமாக நல்லூரை மாற்றின. எண்பதுகளில் விடுதலைப்போராட்டத்தின் போதும் இந்நிலையிலேயே நல்லூர் கருதப்பட்டு வந்திருக்கின்றது. இந்திய இராணுவ காலத்தில் லெப். கேணல் திலீபன் தன்னுடைய அகிம்சை போராட்டத்தை நடத்த நல்லூரையே தெரிவு செய்திருந்தார். இவ்வாறன சம்பவங்கள் எண்பதுகளிலும் நல்லூர் என்பது யாழ்ப்பாணத்தின் அடையாளம் என்ற அருட்டுணர்வை தொடர்ந்தும் சமூகத்திற்கு செய்துகொண்டே இருந்தன.
இரண்டாயிரங்களில் நவீன ஊடகங்களின் வளர்ச்சியும் தமிழ்த்தேசிய அமைப்புக்களின் வளர்ச்சியும் இந்து அமைப்புகளும் தொடர்ச்சியாக நல்லூரை சமூக அடையாளமாகவே மாற்றத்தொடங்கியது. குறிப்பாக நல்லூரின்கோவில் யாழ்ப்பாணத்தைத்தாண்டி இலங்கை முழுவதும் சர்வதேசத்துக்கும் , ஒரு சுற்றுலாதலமாகவும் , மரபுரிமை தாபனமாகவும் , சித்தரிக்கப்பட்டது. புலம்பெயர் தமிழர்களும் , உள்ளூர் தமிழர்களும் சமய நிறுவனம் என்பதைத்தாண்டி நல்லூரை சமூக அடையாளமாக நம்புகின்றனர். தென்னிலங்கையைப்பொறுத்தவரை நல்லூரே யாழின் பிரதான அடையாளம் என்ற நம்பிக்கை வேரூன்றி விட்டது. யாழ் நகரம்சார்ந்து அதிக மக்கள் கடந்த காலத்தில் தென்னிலங்கைக்கு வேலை , வியாபரம் முதலான தேவைகள் நிறுத்தம் இடம் பெயர்ந்ததாலும் அரசியல் , பொருளாதாரம் கொண்ட உயர் குழாமினர் தொடர்ந்தும் நல்லூரையே கடந்த ஐம்பது வருடங்களில் அதிகம் கொண்டாடிய காரணத்தாலும் தென்பகுதிக்கும் சரி இலங்கை சுற்றுலா துறை போன்ற அரச கட்டமைப்புகளுக்கும் சரி நல்லூரே முதன்மை அடையாளம் என்னும் தோற்றம் உருவாக்கப்பட்டு அது வேரூன்றவும் செய்துள்ளது. நாட்டை அக்கிரமித்திருந்த இராணுவம் , மக்களை கொடுமைக்கும் சகலவித கொடுமைக்கும் உண்டாக்கிய ராணுவம் ஹெலியில் வந்து பூச்சொரியும் அளவிற்கு நல்லூரை , மக்கள் செல்வாக்கும் , அடையாளமும் கொண்ட இடமாக தென்பகுதி கருதி வந்திருக்கின்றது.

குறிப்பாக இலங்கை அரச நிர்வாகம் நல்லூரை வணிக இலாப மையமாக தொடர்ந்தும் கையாண்டு வருகின்றது . உண்மையில் நல்லூர் திருவிழா அல்லத்து நல்லூர் சூழல் ஆரம்ப காலங்களிலே வணிகம் சேர்ந்த கடைத்தெருக்கள் நெருக்கமாக இருந்த ஒன்றாகவே காணப்பட்டு வந்திருக்கின்றது . கடையிற் சுவாமிகள் போன்ற சித்தர்களின் கதைகளிலும் , முதிய யாழ்ப்பாணப்பிரஜைகளின் அனுபவக்கதையாடல்களில் இருந்தும் இதனை உறுதிப்படுத்த முடிகின்றது. ஆனால் நல்லூர்ச்சூழல் இருந்த வணிகம் சார்ந்த திருவிழாக்கால உரித்துகளை நகரசபை போன்ற அரச அமைப்புக்கள் எடுத்துக்கொள்கின்றன, அவை நல்லூர்ச்சூழலை வருமானம் ஈட்டும் மையமாக கையாள்வதற்காக நல்லூர் சூழலை வணிக மேன்நிலை ஆக்கம் , அல்லது விரிவாக்கத்திற்கு உட்படுத்துகின்றனர்.

தவிர நல்லூர் கோவிலின் நடை முறைகள் , நிர்வாகம் , என்பவை பிரசித்தமாக்கபடுகின்றன, நல்லூர் திருவிழா யாழ்ப்பாணத்தில் அல்லத்து வடபுலத்தின் மிக அதிக மக்கள் கூடும் பெருங்கொண்டாட்டமாக நிகழ்த்தப்படுகின்றது. ஒரு ரூபாய் டி க்கட் , எந்த சர்வதிகாரி நுழைந்தாலும் சட்டையைக் கழற்றி ஒரு சாதாரண பக்தனாகவே நுழைய விடும் தனித்தன்மை , என்பன நல்லூரை தொடர்ந்தும் அடையாளமாக ஒளிரவிட உதவு கின்றன. வர்த்தக ரீதியாகவும் , பண்பாட்டு ரீதியாகவும் இம்மாபெரும் ஒன்று கூடல் நல்லூரின் அடையாள நம்பிக்கைக்கு தொடர்ச்சியான வலுவினைக்கொடுக்கின்றது , தவிர இலங்கையின் ஒட்டு மொத்த இந்து மையங்களுள் முக்கியமானதாகவும் நல்லூர் வளர்ச்சி பெற்றுள்ளது.

அது பொலிவிழந்து போனயுத்த வடுவின் இன்னொரு அடையாளம் அல்லது சாட்சியமாக மாறியது. அதனைப் போல அன்னதானக் கந்தன் எனப்படும் செல்வச்சந்நிதி முருகனும் கிராமிய நிலை சார்ந்து அதிக மக்கள் கூடும் ஒரு கோயிலாகவும் இருக்கின்றது. அதன் கொண்டாட்டம் நகரத்தில் இருந்து அதிகம் விலகிய ஒன்றாகவும் இருக்கின்றது.
இவ்விரு கந்தர்களும் கொண்டாட் டம், திருவிழா சார்ந்து நீண்டதும் மூத்ததுமான பண்பாட்டு வரலாற்றைக் கொண்டவர்கள்.

எனினும் ஐரோப்பிய காலனித்துவத்தின் பின்னர் அல்லது காலனித்துவ காலத்திலேயே நல்லூர் கோவில் பற்றிய தகவல்கள் மெல்ல வெளித்தெரிகின்றன. தனியார் கோவிலாக இருந்த நல்லூர் இந்து மரபின் செல்வாக்கினால் வளர்ந்துள்ளது. எழுபது எண்பதுகளை சேர்ந்த தலைமுறையினர் நல்லூரைச் சிறிய ஊர்க்கோவிலாக இருந்த நிலையையே அதிகம் நினைவு கூருகின்றனர். ஒப்பீட்டளவில் பார்த்தால் தற்போது இருக்கும் நல்லூரின் அமைப்பும் அதன் வளர்ச்சியும் குறுகிய கால வரலாற்றையே கொண்டிருக்கின்றன.
பதினாறாம் நூற்றாண்டிற்கு நெருக்கமாக கோட்டை இராசதானியை சேர்ந்த செண்பகப்பெருமாள் என்ற அரசன் யாழ்ப்பாணத்தை நிர்வகித்த போது நல்லூர்க் கோயிலுடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்ததாக வரலாற்று ஏடுகள் சொல்கின்றன. அதற்கு ஆதாரமளிப்பது போல் நல்லூர் கட்டியத்தில் இன்றும் செண்பகப்பெருமாளின் பெயர் சொல்லிப்பாடும் வழமை காணப்படுகின்றது. இந்த வகையில் ஆட்சியாளர்கள் அல்லது அதிகார மட்டத்தினர் நல்லூருடன் கொண்டிருந்த செல்வாக்கு அதன் அடையாள உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தது எனலாம்.

குறிப்பாக நல்லூர் யாழ்ப்பாண மேட்டுக்குடி இந்துக்களின் நெருக்கமான ஸ்தலமாக கருதப்பட்டமை நல்லூரை யாழ்ப்பாணத்தின் அடையாளமாக மாற்றுவதில்செல்வாக்குச் செலுத்தியது. போர்த்துக்கேயர் காலத்தில் இக் கோயில் இடிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அத்தோடு நல்லூரை சுற்றி இருக்கும் பகுதிகளில் நாலு திசைகளிலும் சட்டநாதர் கோயில், கைலாய பிள்ளையார் கோயில், வீரமா காளியம்மன் கோயில், பூதராயர் கோயில் போன்றன நல்லூர்க் கோயிலோடு கொண்டிருந்த தொடர்புகளும் ஒரு குறித்த வலையமைப்பின் ஊடாக நல்லூரை அடையாளமாக மக்கள் நம்பும் படி செய்தது.
தற்பொழுது இருக்கும் நல்லூர்க் கோயிலும் தொல்லியல் – வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் நல்லூர்க் கோயிலும் வெவ்வேறானவை என்றே சொல்லப்படுகின்றது. கிட்டு பூங்காவிற்கு சமீபமாக இருக்கும் கிறிஸ்தவ தேவாலயத்தின் இடத்திலேயே பழைய நல்லூர் முருகன் கோயில் இருந்ததாக சான்றுகள் சொல்கின்றன. அத்தோடு தற்பொழுது இருக்கும் நல்லூர் கோயில் இஸ்லாமிய சூபி வழிபாட்டுடன் தொடர்புகளை கொண்ட இடமாக இருந்ததான நம்பிக்கைகளும் உலவுகின்றன. இந்த வரலாறு சார்ந்த விவாதங்களும் நல்லூர் ஒரு பெரும் அடையாளமாக உருவாகத் துணைநின்றதென்றும் கருத இயலும்.

சித்தர்கள் என்று சொல்லப்படும் செல்லப்பா சுவாமிகள், யோகர் சுவாமிகள் போன்றோர் நல்லூர் கோவில் சூழலிலேயே தங்கள் வாழ்கையைக் கழித்துள்ளனர். அத்தோடு நாவலர் போன்ற யாழ்ப்பாண சமூக அரசியல் சமய பகைப்புலத்தில்செல்வாக்குடன் இருந்த முக்கியஸ்தர்களும் நல்லூரை கொண்டாடவும், நல்லூரை தம் வெளிப்பாடுகளில் முதன்மைப்படுத்தவும் முனையும் போது வரலாற்று ஓட்டத்தில் நல்லூர் தவிர்க்க முடியாத இடத்தினைப் பெறுகின்றது. நல்லூர் கோவிலைச் சேர்ந்தவர்களுக்கும், கைலாச பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் போன்றோருக்கும் நடந்த முரண்பாடுகள், சண்டைகள் இன்றும் இலக்கியகாரர்களி டை@யயும், சமூக ஆர்வலர்களிடையேயும் ஏன் சாதாரண மக்களிடையேயும் விவாதிக்கப்படுவதுண்டு.
மேலும் நல்லூரின் ஆலயச் சூழல் என்பது சமூக அமைப்பில் மேட்டுக்குடிகள் என்று சொல்லப்படும் சமூகத்தினரை ஆரம்பத்தில் கொண்டிருந்தது. அத்துடன் சமூக அமைப்பில் கோயிலுடன் தொடர்புபட்ட குடிகள் முக்கிய பங்கினை ஆற்றினர். இதுவும் நல்லூரின் அடையாளத்தை வலுப்பெறச் செய்தது.
எழுபதுகளில் நல்லூர் சூழலில் ஆலயச் சூழல் சார்ந்த மக்கள் தங்களை கோயில் சேர்ந்த தனி அடையாளத்தினர் என்று காட்ட முனைந்துள்ள தகவல்க ளையும் கதைகளையும் கேள்வியுற முடிகின்றது. உதாரணமாக அக்காலத்தில் நல்லூர் கோயில் சேர்ந்த மேட்டுக்குடி என்று தம்மை அடையாளம் செய்யும் குறிப்பிட்ட சமூகப் பெண்கள் சேலை உடுத்திருக்கும் முறைகளில் கூட தங்களை வேறுபடுத்திக் காட்டியுள்ளனர். குறிப்பாக அவர்களுடைய முந்தானையை சுற்றி கட்டும் போது அதன் நீளத்தை அதிகரித்து அணியும் பழக்கத்தைக் கொண்டிருந்தனராம். இவை போன்ற குறித்த வர்க்கம் சார்ந்த நம்பிக்கை மூட நம்பிக்கை மற்றும் அதிகாரம் சேர்ந்த கதைகளும் உரையாடல்களும் நல்லூரின் அடையாள உருவாக்கத்தில் முக்கிய கதாநிலைகளை வகிப்பதை மனதில் கொள்ளுதல் வேண்டும்.

இந்த ஓட்டம் ஐரோப்பிய காலனித்துவம் நீங்கப்பெற்று சுதேச ஆட்சி முறை வந்ததன் பின்னரும் நல்லூரை முக்கிய தலமாகவே வைத்திருந்தது. நல்லை ஆதீனம் , மடம் என்பவற்றின் இயக்கம், இந்து நிறுவனங்களின் செயற்பாடு, நல்லூரின் நிர்வாக அமைப்பு உருவாக்கம் என்பன பக்தி என்பதையும் தாண்டி ஒரு மரபடையாளமாக நல்லூரை மாற்றின. எண்பதுகளில் விடுதலைப் போராட்டத்தின் போதும் இந்நிலையிலேயே நல்லூர் கருதப்பட்டு வந்திருக்கின்றது. இந்திய இராணுவ காலத்தில் லெப். கேணல் திலீபன் தன்னுடைய அகிம்சை போராட்டத்தை நடத்த நல்லூரையே தெரிவு செய்திருந்தார். இவ்வாறன சம்பவங்கள் எண்பதுகளிலும் நல்லூர் என்பது யாழ்ப்பாணத்தின் அடையாளம் என்ற அருட்டுணர்வை தொடர்ந்தும் சமூகத்திற்கு செய்துகொண்டே இருந்தன.
இரண்டாயிரங்களில் நவீன ஊடகங் களின் வளர்ச்சியும் தமிழ்த்தேசிய அமைப்புக்களின் வளர்ச்சியும் இந்து அமைப்புகளும் தொடர்ச்சியாக நல்லூரை சமூக அடையாளமாகவே மாற்றத்தொடங்கின. குறிப்பாக நல்லூர் கோயில் யாழ்ப்பாணத்தைத் தாண்டி இலங்கை முழுவதற்கும் சர்வதேசத் துக் கும், ஒரு சுற்றுலாதலமாகவும், மரபுரிமை தாபனமாகவும், சித்தரிக்கப்பட்டது. புலம்பெயர் தமிழர்களும், உள்ளூர் தமிழர்களும் சமய நிறுவனம் என்பதைத் தாண்டி நல்லூரை சமூக அடையாளமாக நம்புகின்றனர்.

தென்னிலங்கையைப்பொறுத்தவரை நல்லூரே யாழின் பிரதான அடையாளம் என்ற நம்பிக்கை வேரூன்றிவிட்டது. யாழ் நகரம் சார்ந்து அதிக மக்கள் கடந்த காலத்தில் தென்னிலங்கைக்கு வேலை, வியாபரம் முதலான தேவைகள் நிமிர்த்தம் இடம் பெயர்ந்தனர். இதன்பாபோது அரசியல், பொருளாதாரம் கொண்ட உயர் குழாமினர் தொடர்ந்தும் நல்லூரையே கடந்த ஐம்பது வருடங்களில் அதிகம் கொண்டாடிய காரணத்தாலும் தென்பகுதிக்கும் சரி இலங்கை சுற்றுலாத்துறை போன்ற அரச கட்டமைப்புகளுக்கும் சரி நல்லூரே முதன்மை அடையாளம் என்னும் தோற்றம் உருவாக்கப்பட்டு அது வேரூன்றவும் செய் துள்ளது. நாட்டை ஆக்கிரமித்திருந்த மக்களை சகலவித கொடுமைக்கும் உண்டாக்கிய ராணுவம் ஹெலியில் வந்து பூச்சொரியும் அளவிற்கு நல்லூரை, மக்கள் செல்வாக்கும், அடையாளமும் கொண்ட இடமாக தென்பகுதி கருதி வந்திருக்கின்றது.
இலங்கை அரச நிர்வாகம் நல்லூரை வணிக இலாப மையமாக தொடர்ந்தும் கையாண்டு வருகின்றது. உண்மையில் நல்லூர் திருவிழா அல்லது நல்லூர் சூழல் ஆரம்ப காலங்களிலே வணிகம் சார்ந்த கடைத்தெருக்கள் நெருக்கமாக இருந்த ஒன்றாகவே காணப்பட்டு வந்திருக்கின்றது. கடையிற் சுவாமிகள் போன்ற சித்தர்களின் கதைகளிலும், முதிய யாழ்ப்பாணப் பிரசைகளின் அனுபவக் கதையாடல்களில் இருந்தும் இதனை உறுதிப்படுத்த முடிகின்றது. ஆனால் நல்லூர்ச் சூழலில் இருந்த வணிகம் சார்ந்த திருவிழாக் கால உரித்துகளை நகர சபை போன்ற அரச அமைப்புக்கள் எடுத்துக் கொள்கின்றன. அவை நல்லூர்ச் சூழலை வருமானம் ஈட்டும் மையமாக கையாள் வதற்காக வணிக மேன்நிலை ஆக்கம், அல்லது விரிவாக்கத்திற்கு உட்படுத்துகின்றனர்.

நல்லூர் கோயிலின் நிர்வாக நடைமுறைகள் பிரசித்தமானவை. அவை எப்போதும் யாருக்காகவும் வளைவதில்லை. அலங்காரக்கந்தனின் சிறப்புகளாக இவை என்றும் மாறாதவை யாக இருக்கின்றன. நல்லூர்த் திருவிழா யாழ்ப்பாணத்தில் அல்லது வடபுலத்தின் மிக அதிக மக்கள் கூடும் பெருங் கொண்டாட்டமாக நிகழ்த்தப்படுகின்றது. ஒரு ரூபா அர்ச்சனை டிக்கட், எந்த சர்வதிகாரி நுழைந்தாலும் மேலாடைகழற்றி ஒரு சாதாரண பக்தனாகவே நுழைய விடும் தனித்தன்மை, நேரம் தவறாத பூஜைக்காலம் என்பன நல்லூரை தொடர்ந்தும் தனித்துவ அடையாளமாக ஒளிரவிட உதவுகின்றன. வர்த்தக ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் இம்மாபெரும் ஒன்று கூடல் நல்லூரின் அடையாள நம்பிக்கைக்கு தொடர்ச்சியான வலுவினைக்கொடுக்கின்றது.

-யதார்த்தன்
நன்றி – புதுவிதி

Share this Post

Leave a Reply