yathaadmin/ July 18, 2016/ கட்டுரை/ 0 comments

கருத்தியல் ரீதியில் பல்கலைக்கழக முரண்பாட்டை புரிந்து கொள்ளுதல்

• இனத்துவ அடையாளமும் தேசியவாதமும்

1891 இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 79 இனங்கள் இருப்பதாக கணக்கு உண்டு. அவற்றின் மூலம் “கலப்பு” இனம் சார்ந்த எண்ணிக்கை தான் மொத்தமும். “தூய” என்று எதுவும் இருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

ஆகவே தேசியவாதமும் இனத்துவ அடையாளமும் இங்கே மறைந்து விட்டது. இது ஒரு அரசியல் சார்ந்த இனத்துவ ஒழுங்குருவாக்கம்.

அதன் வெளிப்பாடுகளை சமூக வலைத் தளங்களில் நிகழும் வேறுபட்ட கதையாடல்கள் மூலம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்

1 – தீவிர தமிழ்த் தேசிய மற்றும் சிங்கள தேசிய வாதம் சார்ந்த பதிவுகள்
2 – மிதவாதக் கருத்துக்கள்
3 – நல்லிணக்கம் சார்ந்த பதிவுகள்

தீவிரம் –

//நேற்று ராத்திரி மூட்டை முடிச்சுகளோட இடம்பெயர்ந்தவர்களை பார்க்கேக்க
30வருச உயிர் வலிகளை இடம்பெயர்வுகளை
உணர்த்தின வன்மமான மகிழ்சி…
நாங்க வாணி விழா கொண்டாடினா நீங்க வெசாக் கொண்டாடுங்க அது சமத்துவம்..
ஆனா யாழ் பல்கலைகழகத்தோட தமிழ் கலாச்சாரம் அது எங்கட தனித்துவம்…
எங்கட கலாச்சாரம்/மொழி தான் எங்கட இருப்புக்கான சான்று அதனை விட்டு கொடுக்கமாட்டம்…//

இது ஒருவரின் முகநூல் பதிவு – இதில் உள்ள சிக்கலான இனத்துவ அடையாளம் பற்றி பார்ப்போம் ,

1 – விடுதலைப் போராட்டத்தில் எப்படி இனத்துவ அடையாளத்திற்காக தமிழர்கள் தாக்கப் பட்டார்களோ அதே காரணத்திற்காக சிங்களவர்கள் இப்படிப் பார்க்கப் பட்டிருக்கிறர்கள்.

2 – வாணி விழா = வெசாக் என்று சிந்திக்கும் சமத்துவம் கண்டிய நடனம் = மேள வாத்தியங்கள் என்று சிந்திக்கவில்லை. இதில் தான் அந்த இன உணர்வின் கூறு மறைந்துள்ளது.

இன்னுமொருவரின் பின்னூடங்களைப் பார்ப்போம்.

//கடந்த 2012ஆம் ஆண்டு மாவீரர் தின அனுஷ்டிப்பின்போது விடுதிகளில் இருந்த தமிழ் மாணவிகளின் முகத்தில் காணப்பட்ட ஓர்மத்தினை அங்கே சகபாடிகளாக இருந்த சிங்கள மாணவியொருத்தி மிக உருக்கமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிந்திருந்தாள்.

“தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற உண்மையை முழுமையாக அன்று நான் உணர்ந்து கொண்டேன். 26ம் திகதி மாலையிலிருந்தே சக தமிழ் மாணவிகளின் கண்களில் ஒருவிதவெறி ஏறியிருந்தது. மாணவர்களைப் படையினர் தாக்க,மாணவிகளோ புலிகளுக்கான விளக்குகளை ஏற்றினார்கள். தாமுண்டு,தமது படிப்புண்டு என்று திரிந்த தமிழ் மாணவிகள்,அன்று திடீரெனப் புலிகளாக மாறியிருந்தார்கள். அவர்கள் கைகளில் துப்பாக்கி மட்டுமே இல்லை. உணர்வால் புலிகளாகவே இருந்தார்கள். மாலை 6.05க்கு படையினர் மாணவர்களைத் தாக்க தாக்க மாணவிகள் விளக்கை ஏற்றியபோது, தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற உண்மையை முழுமையாக நான் உணர்ந்துகொண்டேன். நாங்கள் புலிகளை அழிக்கிறோம் என்று,தமிழ் மாணவர்களைப் புலிகளாக்கிவிட்டிருக்கிறார்கள்//

இதன் பின்னணியைப் பாருங்கள்,

இனத்துவம் சார்ந்த ஒரு பயம் அல்லது அச்சத்தை மற்றைய இனத்தின் மீது உணரும் தருணம் இது தான், இந்தப் பயம் தான் தேசியவாதத்தின் வெற்றி. இனத்துவ ரீதியில் தங்களை அந்நியமாக உணரும் “கலாசார அந்நியமாதல் ” இது.இதன் மூலமாக தான் “சிங்கலேயே “போன்ற கோஷங்கள் தெற்கில் உயிர் வாழுகின்றன.

மேலும்

// ஒரு தனித் தமிழ் இடத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பொதுப் பாரம்பரியத்தை மாற்ற நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையாகும்.//

இங்கே பொதுப் பாரம்பரியம் என்று ஒன்று கிடையாது என்பது கூட பதிவை இட்டவருக்குத் தெரியவில்லை.

ஆனால் இவர் சொல்லியதில் ஒரு முக்கியமான புள்ளி உள்ளது. “தனித் தமிழ் இடத்தில்” என்பது தான் பல்கலைக்கழக யாழ்ப்பாண மனநிலை.

//நேற்றையான் சம்பவத்துக்கு பின்னர் சிங்கள நண்பர்களைக் கொண்ட செம்புதூக்கிகள் இன ஒருமைப்பாடு வேண்டும் எனவும், கிராமிய பொருளாதார அபிவிருத்தியை பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் கருத்துப்பகிர்நதுள்ளனர் (ஆங்கிலத்தில்).
சம்பவத்தை நான் ஆதரிக்கவுமில்லை எதிர்க்கவுமில்லை. பல்கலைக்கழகத்தை அன்மித்து வாழும் எனக்கு இது புதிதும் இல்லை.
இம்புட்டு நாளும் இவனுகள் அடிபடேக்க வராத சமுக அக்கறை சிங்களவன் அடிவாங்கீற்றான் எண்டோன வந்துட்டுது.
முதல்ல நமக்குள்ள ஒற்றுமையா இருப்பம். அப்புறம் மற்ற இனத்தானோட இருக்கிறத பற்றி யோசிப்பம்.//

13767255_10155027233464202_8106371100936112715_o

நமக்குள் ஒற்றுமையாக இருப்போம் என்பது, நாம் ஒரு தேசிய / இனம் என்று சிந்திக்க அழைக்கும் குரலே தேசியவாதத்தின் அழைப்பு ஒலி.

//நான் பட்டம் பெற்றது மொரட்டுவை பல்கலைக்கழகத்தில். என்னைப்போலவே நிறைய தமிழ் மாணவர்கள் பட்டம் பெற்றார்கள். பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்புக்காக எங்களையும், விருந்தினர்களையும் அழைத்துக்கொண்டு போகும் போது கண்டிய பாரம்பரிய முறைப்படி வாத்தியம் கொட்டியும், கண்டிய நடனம் ஆடியும் அழைத்துப் போனார்கள். நான் உட்பட எந்த தமிழ் மாணவனுமே அதை ஆட்சேபிக்கவில்லை. அட… அதை சட்டையே செய்யவில்லை. காரணம் மொரட்டுவை பல்கலைக்கழகம் சிங்களவர்களை பெரும்பான்மையாகக்கொண்ட , சிங்கள இடத்தில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகம். அங்கே நட்டுவமும் பரதநாட்டியமும் வேண்டும் என்று அடம்பிடிக்க கூடாது என்றும், அது தொடர்பில் சட்டை செய்யக்கூடாது என்ற இங்கிதமும் எங்களுக்கு தெரிந்தருந்தது. எனக்கு தெரிந்து , யாழ் பல்கலைக்கழகம் மொரட்டுவையில் இல்லை.//

இதில் இவருக்கு இங்கிதம் என்பதும் உரிமை என்பதும் என்ன என்று தெரியவில்லை.அது தான் பிரச்சினை.

சிங்கள மாணவர்களும் இதே போல் தான் இனவாதத்தை கக்கியிருக்கிறார்கள். இது தான் முரண்பாட்டின் காரணம். இதில் குறித்த கருத்தியல்கள் தொடர்ந்து ஒரே விதமாக சிந்திக்கப்பட்டு, உரையாடப்பட்டு வருவதனாலேயே இளைஞர்களும் அப்படியே பேசுகிறார்கள்.

இங்கே இனவாதம் இருக்கிறது, அதனை தவிர்ந்த பல்வேறு காரணிகளும் இருக்கிறது. கலாசார அந்நியமாதல், ஒரு பிரதேச அடையாளம், இனத்துவ அடையாளம் பற்றிய தவறான புரிதல்கள், தாழ்வுணர்ச்சி, வெல்லும் ஆசை இன்னும் மற்றும் இன்னும் பல.

எப்பொழுது தமிழ் சிங்கள முஸ்லிம் மாணவர்களுக்கிடையில் உரையாடலும் புரிந்துணர்வும் வளர்கிறதோ அப்பொழுது தான் இது மாறும். அது வரை இனவாதம் வெல்லும் .

அனைவரும் இரண்டு மொழியையும் கற்க வேண்டும். அப்பொழுது தான் ஒரு குரலில் பேச முடியும்.

கிரிஷாந்த்-

Share this Post

Leave a Reply