பசியோடு அலைபவர்களும் நீர்நிலைக்கதைகளும்.
நேற்று காலையில் வீட்டிற்கு வந்து தனுஷ் என்னை ஏற்றும் போதே கைதடிக்கு போய்விட்டு போகவேண்டும் என்றான். சரியென்று தலையாட்டிவிட்டு ஏறிக்கொண்டேன். காலையில் அலுவலகம் போக எடுக்கும் அந்த 45 நிமிடங்களில் ஓயாமல் ஏதாவது அலட்டிக்கொண்டும் பாடிக்கொண்டும் போவோம் , வரும் போதும் அப்படித்தான். தனுசுடனான பெரும்பாலான அரட்டைகளில் இலக்கியம் , சினிமா , அரசியல் என்று ஓடிக்கொண்டே இருக்கும். தனுஸ் ஒரு தீவிர வாசகன் , சினிமா இரசிகன் அதுவும் அவன் பேச்சில் எப்போதும் மலையாள வாசம் அடிக்கும் . என்னுடைய நண்பர்களில் மலையாளம்