yathaadmin/ March 25, 2016/ கட்டுரை/ 0 comments

A woman can be seen jumping from a burning building in Surrey Street after rioting took place in Croydon, England on August 8, 2011. Riots and looting have broken out all across Greater London and are now spreading across the country following the shooting of Mark Duggan by police in Tottenham, North London on Friday, August 8th London, England - 08.08.11 Mandatory Credit: WENN.com

 

 

01

கோலியாத் கிழவன் தன்னுடைய குறிப்பு புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருந்தான்.

இலங்கைத்தீவில்  “பறங்கி கோட்டை போனது போல” என்று ஒரு வழக்கு நிலவி வருகின்றது. இது ஒரு வரலாற்று  சம்பவத்தை குறிக்கும் தொன்ம வழக்காகும், 1505 ஆம் ஆண்டு ஐரோப்பிய  நாடுகாண்பயணிகளான  போர்த்துகேயரது லொரன்ஸ் சோ டி அல்மெய்டா  என்ற கப்பல் படை தளபதி புயல் காற்றில் சிக்குண்டு  இலங்கையின் தென் துறைமுகமான காலிக்கடற்கரையில் வந்து நங்கூரமிட்டான். அப்போது இலங்கை இராசதானியின் தென் பகுதியை  8 ஆவது வீரபராக்கிரம பாகு என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவனுடைய இராஜ்ஜியம் கோட்டை என்று அழைக்கப்பட்டது.

லோரன்ஷோ டி அல்மெய்டாவை கோட்டை மன்னனின் வீரர்கள் கண்ணுற்றனர். அந்த சந்திப்பை இலங்கையில் கேலியாக இவ்வாறு குறிப்பிடுவர்,

மன்னனின் வீரர்கள் மன்னனிடம் வந்து  அந்த வெள்ளையர்கள்  கல்லை கடித்து , இரத்தத்தை அருந்துபவர்களாக இருக்கின்றனர் என்று கூறினர். அவர்கள் கேக்கை

 

 

யும் வைனையும் தான் அவ்வாறு குறிப்பிட்டனர்.அத்துடன் அவர்கள் வியாபரத்தின் பொருட்டு மன்னரை நட்புறவாக சந்திக்க விரும்புவதாகவும் அறிவித்தனர்.

மன்னர் உடனடியாக தன் இராஜதந்திரத்தை கைக்கொண்டார். காலியில் இருந்து கோட்டையை சில மணிநேர பயணத்தில் அடைந்துவிடலாம். ஆனால் பறங்கியர் அந்த சுலப வழியை அறிந்து கொண்டால். இலகுவாக கோட்டைக்கு தீங்கிளைக்கலாம் என்று மன்னர் கருதினார். எனவே அவர்களை சுற்று பாதை யூடாக அழைத்துவந்து  , கோட்டை வெகு தொலைவில் காடு மலைகளுக்கு அப்பால் பாதுகாப்பாக இருக்கின்றது என்ற மாயையை அவர்களுக்கு உண்டு பண்ண வேண்டும் என்று மன்னர் திட்டமிட்டார். எனவே அவர்களை மலையகத்தை சுற்றி பல நாள் பயணத்தின் பின் தன்னிடம் அழைத்து வருமாறு கட்டளையிட்டார்.

பறங்கியரின் இந்த பயணத்தைதான் இலங்கை மக்கள் பறங்கி கோட்டை போனது போல என்று அழைத்தனர்.

இவ்வாறு  1505 இல் தொடங்கிய  ஐரோப்பிய தொடர்பு இலங்கையின் வரலாற்றை மாற்றி போட்டது.  போர்த்துகேயரின் பின் டச்சுகாரர் பின்னர் பிரித்தானியர் என்று  இலங்கையின் நிலங்களுக்குள்ளும் அரசியலுக்குளும் மிகத்தந்திரமாக நுழைந்து, அதிகாரத்தை நிலை நாட்டி, தமது குடியேற்ற நாடென இலங்கையை அறிவித்து, இலங்கை திரு நாட்டின் வளத்தை எல்லாம் வள்ளம் வள்ளமாக மேலைதேசம் கொண்டு சென்று அபரிவித வளர்ச்சி கண்டனர். இது இலங்கைக்கு மட்டும் நிகழவில்லை கீழைத்தேச தேசங்கள் அத்தனைக்கும் இதுதான் நிகழந்த்து . ஆசியர்களும் ஆபிரிக்கர்களும் கறுத்த தோலுடைய அடிமைகளானார்கள் , ஐரோப்பியர், அதிலும் குறிப்பாக பிரித்தானியர் உலகெங்கும் நிறபேதமும் , இனபேதமும் , பொருளாதார சுரண்டலும் அடிமைத்தனமும் ஓங்கி வளரச்செய்தனர். சூரியனே மறையாத தேசமாக பிரித்தானிய அரசின் ஆணையை பரவச்செய்தனர்.

இது நவீன யுகம் வரை தொடர்ந்தது. இரத்தம் சிந்தா புரட்சி ,தேர்தல் , சனநாயகம் , என்று மக்களை நம்ப வைத்து. உலகத்தின்  ருத்திராட்ச பூனையாக மாறி நின்றது பிரிட்டன். போதாத குறைக்கு  அமெரிக்க கண்டங்களில் அமைதியாக வாழ்ந்த தொல்குடிகளை அழித்து அமெரிக்கா கனடா போன்ற குழந்தைகளையும் பிரசவித்தன பிரிடிஷ் பெண் முடிகள்.

இது மட்டுமல்ல…………

 

CPCb-KQWoAAK4Tj

02

இவ்வாறு தொடர்ந்து கொண்டிருந்த கோலியாத் கிழவனின் குறிப்புப்புத்தகம் அதன் பிறகு சில பக்கங்கள் கிழிக்கப்பட்டு இருந்தது.

பின்னர் மற்றைய பக்கங்கள் இவ்வாறு தொடங்கின,

 

பிரித்தானியாவின்  லண்டன் மற்றும் பல முக்கிய நகரங்களில் 2011 ஆகஸ்ட் 6தொடக்கம்10 ஆம் திகதி வரை ,  பிரதமர் , துணைப்பிரதமர் ,நிதிஅமைச்சர் , உள்துறை அமைச்சர் ,லண்டன் மேயர் என அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் விடுமுறையை கழிக்க சென்ற நேரத்தில் லண்டனில்  வரலாறு காணாத இக்கலகம் ஏற்பட்டது.

(விக்கிபீடியா -2011 பதிவு)

 

கறுப்பினத்தவர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பான ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது . லண்டன் மாநகரமே போர்கோலம் பூண்டது.

(2011 – யாழ்ப்பாண பத்திரிகை ஒன்றின் இறுதிப்பக்க செய்தி )

 

லண்டன் கலவரத்தின் போது அதிஸ்ரவசமாக உயிர் தப்பினார் நடிகை பிரியங்கா சோப்ரா.

(இந்திய நாளிதழ் ஒன்றின் இணையப்பக்கம் 2011)

,

 03

கோலியாத் கிழவனின்  நாட்குறிப்பு புத்தகம் மிகவும் போர் அடித்ததால்  காலையில் பஸ் பிரயாணத்தின் போது வாசித்துமுடித்த  சேனனின் லண்டன்காரர் என்ற

குறுநாவல் பற்றிய எனது அபிப்பிரயாயங்களை  எழுத்தொடங்கினேன்.

 

சில திரைப்பட இயக்குனர்கள் , மற்றும்  நாவல் , சிறுகதை , கவிதை என எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தர்கள் தமது பிரதியின்  இறுதி அத்தியாயத்தையோ காட்சியையோ மையப்படுத்தி விட்டு ஏனைய வற்றை கட்ட தொடங்குவர். எனக்கு தெரிந்து  சேனனும் விமர்சனம் எனும் இறுதி அத்தியாயத்தின் திரட்சியை  பிடித்துக்கொண்டே நாவலின் ஏனைய பகுதிகளை கட்டுகிறார்.

சமீப நாட்களாக விமர்சனம் என்ற சொல்லின் மீது அதன் பிரயோகத்தில் இருக்கும் அதிகார தொரணை பற்றியும் உடன்பாடற்ற தன்மை என்னிடம் இருக்கிறது. தன்னுடைய முழுமையை  ஒட்டுமொத்தமாக்கி  ஒரு பிரதியை ஆக்குபவனின்மீது அது பிழை இது சரி என்று வாளெடுத்து வெட்டுவது எந்தளவு சரியான செயல் என்பது என்னுடைய கேள்வி. காலம் காலமாக விமர்சனம் என்ற பெயரில் நக்கீரர் தொடங்கி  “நெற்றிக்கண் திற்ப்பினும்” என்று ஆரம்பிக்கின்றோம். சேனன் தன் நாவலின் கடைசி அத்தியாயத்தில் “விமர்சனத்தை” கட்டுடைத்து பல துண்டுகாளாக்கி அதன் அதிகார முகத்தை சோபை இழக்க செய்கிறார். இத்தனைக்கும் அவருடைய கடைசி அத்தியாயம் விமர்சிப்பது அவருடைய ஏனைய அத்தியாயங்களைதான். நாவலை வாசிக்க தொடங்கும் நக்கீரர்கள் ஒவ்வொரு அத்தியாயத்தை கடக்க கடக்க “குண்டில தட்டின புளுகோடு”  தம் இலக்குகளை குறிப்பெடுத்துகொள்வர்.ஆனால் இறுதி அத்தியாயம் அவர்களுடைய குறிப்பு புத்தகத்தை கிழித்து வீழ்த்தும். தான் சொல்லவந்த அத்தனையையும் மிச்சம் விட்டு விட்டு ,விமர்சனத்திற்கு தேவையானவற்றையும் எழுத்தரையும் பிரதிக்குள் வைத்தே கொன்றுவிட்டு முடிகிறது நாவல்.

 

இடது சாரி தளத்தில் நின்று பேசும் இந்நாவல் தனக்குள் நிறைய விடயங்களை -பிரச்சினைகளை  போட்டு துவைக்கிறது ,- எள்ளி நகையாடுகின்றது . லண்டன் கலவரத்தினோடு தொடர்பு படும் லண்டன் மாநகரின் புறநகர் அல்லது விளிம்பு நிலைகளில் வசிக்கும் மக்களினை தன்  கதை மாந்தர்களாக கொண்டு பின்னப்படுகிறது லண்டன்காரரின் கதை.

தனிமனிதர்கள் உருவாக்கும் அதிகாரம் அரசிடம் சென்று பின் அரசிலில் இருந்து  ஒவ்வொரு தனிமனிதர்களிடம் வந்து சேரும், இந்த அதிகாரத்தின் சிரங்குப்புண்களை மெல்ல மெல்ல சம்பவங்களையும் மனிதர்களையும் வைத்து கட்டவிழ்கிறார் சேனன்.

அதன் பிரகாரம் நாவல் பேசும் பிரச்சினைகளை இரண்டு தொகுதிகளாக்கலாம்

01.இன வெறி , சாதி வெறி , நிறவெறி ,ஆகியவையோடு  முதலாளித்துவம் முதலான ஆதிகாரத்தின் முகம்.

  1. பால் நிலையியல் , மற்றும் உடலின் மீதான அதிகாரத்தின் தோரணை.

 

சனநாயகத்தின் தாய் தேசம் என்று கூறும் இங்கிலாந்தில் சாதியும் , இனமும் , நிறமும் , ஒரு கலவரத்தின் பின்னர் எப்படி சாயம் கழுவி வெளுத்து போகின்றது என்பதை லண்டன்காரர் எள்ளி நகையாடுகின்றது. மக்கள் கொடுத்த அதிகாரம் அரசிடம் இருந்து எவ்வாறு கடைசி குடிமகன் வரை வந்தடைந்து அதன் மூலம்  தனிமனிதர்கள்  எவ்வாறு மிருகநிலைக்கு போகின்றார்கள் என்பதை தோலுரிக்கின்றது . கடை முதலாளியாக வரும் பாஸ்கரன் இதற்கு கச்சிதமான உருவாக்கம் என்று சொல்வேன்.

அடுத்து பால்நிலையியல் பற்றி நாவல் பேச முற்படுகின்றது , அதுவும்  மேலைத்தேசத்தவர்களிடம் இருந்து  முற்றிலும் வேறுவிதமான பண்பாட்டு சமூக இன் புலத்தில் இருந்து வந்த ஆசிய ஆபிரிக்க தேச மனிதர்களை கொண்டு ஓரினச்சேர்க்கை , லிவ்விங் டூகெதர் முதலான பால்நிலை தெரிவுகளையும் அதன் மேற்படையான உளச்சிக்கல் களையும் சேனன் முன்வைக்கின்றார், ஐய்யர் , கறுப்பி ஆகியோரின் உறவு நிலை பற்றிய விபரிப்புகளும் அவர்களின் பாத்திரங்களும்  ஆண் பெண் உடலும் உளவியலும் ஒன்றின் மீது  ஒன்று  மேற்கொள்ளும் அதிகார இடையீட்டை முவைக்கின்றது. மேற்படி விடயங்கள்  தொடர்பான  மேலும் அழுத்தமான உட்செல்கைகளை  முன்வைக்க கூடிய  சாத்தியங்கள் நாவலில் இருக்கின்றன என்பது என்னுடைய அபிப்பிராயம்.

மற்றபடி பிரதியின்  அமைப்பும் கருத்தியலும் முன்வைக்கும்  ,வியாக்கியானம் செய்யும்  விடயங்கள்  லண்டன் காரரை  தமிழிலக்கிய பரப்பில் நல்லதொரு குறிகாட்டியாக நிலைக்கச்செயவதாய் உணர்கின்றேன்.

 

அத்துடன் எழுதுவதை நிறுத்திவிட்டு  கோலியாத் கிழவனின் குறிப்பு புத்தகத்தை மீண்டும் புரட்டினேன். கடைசி பக்கத்தில் இருந்து  ஒரு போட்டோ நழுவி வீழந்தது. எடுத்து பார்த்தேன் . கோலியாத்கிழவன்  கோட் சூட் எல்லாம் அணிந்த படி லண்டனில் உள்ள மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த  ராணி  இரண்டாம் எலிசபத்தை மிகத்தத்துரூபமாக செதுக்கிய மெழுகுச்சிலையை  கட்டி பிடித்தவாறு  “ஈ ” என்ற சிரிப்புடன் கண்களில் பெருமிதம் பொங்க போஸ் கொடுத்தபடியிருந்தார் .

நான் கொஞ்சம் சத்தமாக

“Fuck the british”

 

-யதார்த்தன்

நன்றி – புதிய சொல் 

 

Share this Post

Leave a Reply