yathaadmin/ March 18, 2016/ கட்டுரை/ 0 comments

12814570_955867787853442_6781526169472144465_n

விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு முன்னாள் போராளிகளும் ,ஆய்தத்தோடு இருந்த போது ; சரியோ தவறோ ஒரு இயக்கத்தில் இருந்தபோது ; அவர்களிடமிருந்த நிமிர்ந்த பார்வையின் தற்போதைய நிலையை எத்தனைபேர் தரிசித்திருக்கிறீர்கள் ? அவர்களின் உடலில் இரும்புத்துருக்களும் துண்டுகளும் இன்னும் அகற்றியும் அகற்றாமலும் இருப்பினும் அவை மனம் வரை இறங்கி உறுத்திக்கொண்டிருக்கின்றது. காவலாளிகளாகவும், கூலிகளாகவும் , ஏன் பிச்சைக்காரர்களாகவும் , இயல்புச்சமூகத்திலிருந்து விரும்பியும் விரும்பாமலும் விலகி இருட்டிலே வாழ்கையை வாழ்ந்து தீர்த்துகொண்டிருக்கின்றது அவர்களின் ஆன்மா .

மேற்படி ஜீவிக்கும் ஆன்மாவையும் கொடும்போரில் அந்தரித்து மரித்து போன ஆண் பெண் போராளிகளின்  ஆன்மாவையும் பிரார்த்தித்து கொண்டு இந்தக்கட்டுரையை எழுதுகின்றேன்.

சிட்டு எனும் அகரமுதல்வன்

முதலில் அகரமுதல்வன் என்னும் ஆன்மாவை அறிமுகம் செய்யலாம். அகரமுதல்வன் பளையில் வசித்தவர் என்பதிலிருந்து அவருடைய பால்ய கால நண்பர்கள் அவரைப்பற்றி குறிப்பிட்டார்கள் (நம்பிக்கையற்றவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டால் அவர்களின் விபரம் தருகின்றேன் )

அகரமுதல்வனுக்கு அப்போது பட்டபெயர் “சிட்டு ” என்பதாகும்.  ஒருமுறை கரபந்துவிளையாடும் போது நண்பர்களுக்கு பொட்டு ,சிட்டு, மொட்டு , வெட்டு என்ற எதுகை மோனை சொற்கள் அமையும் அம்மாவை பற்றிய ஒரு பாலியல் வக்கிர கவிதையொன்றை சொன்னதில் இருந்து அவருடைய பட்டப்பெயர் சிட்டாக பரிணமித்தது. அதன் பின்னர்  போர் முடிந்தது அகரமுதல்வன் தமிழ்நாட்டுக்கு சென்றமை , பின்னர் அவர் இலக்கிய உலகில் தன்னையொரு பெரும் புள்ளியாக்க எடுத்த இஸ்டெண்கள் அபரிவிதமானவை , புலிகள் ஆட்சேர்க்கும் போது வடலிக்குள் பதுங்கியிருந்த சிட்டுக்குருவி  யாரும் இல்லாத போது தமிழ்நாட்டிற்கு சென்று தமிழ்த்தேசியத்தை அறைகூவி விற்கத்தொடங்கியது.அகரமுதல்வன் என்ற ஆன்மாவின் வாழ்க்கை பின்னனியை குறிப்பிட எனக்கு விருப்பமில்லை, ஆயினும்  மனபிரழ்வு கொண்ட ஒருவரை வைத்தியம் செய்யும் உளவளநிபுணர் அவருடைய வாழ்க்கை பின்னணியை கேட்டறிவதைப்போல் உங்களுக்கு இதனை சொலவதன் மூலம் அகரமுதல்வன் “சாகாள்” என்ற அதுவி (அதற்கு என்ன பெயர்வைப்பதென்று தெரியவில்லை , குறைந்த பட்சம் தமிழில் எழுதப்ட்ட பாலியல் கதைகளில் இருக்கும் மனித நேர்மை கூட இல்லாத ஒன்றை எதுவென பெயரிடுவது.)

தமிழியினியின் கூர்வாளின் முனையில் என்ற பிரதி வெளியாகி சில நாட்களின் பின்னர் , அவரை மையம் கொண்டு ஒரு புனைவை ஆக்கிவிட முனைந்திருக்கிறது சிட்டுவின் ஆன்மா . தமிழ்தேசிய வாதம் பேசும் ஈழத்தின் குழந்தை என்ற வகையில்சிட்டுவின் அது ஒரு பாலியல் வக்கிர பிரதியாக மாறி நிற்கின்றது. ஒட்டு மொத்த பெண்போராளிகளையும்  வக்கிரமாக அணுகின்றது அந்த எழுத்துக்கள்.

அதனை இங்கே வாசிக்காலாம்

http://www.piraththiyaal.com/2016/03/blog-post_17.html?m=1

இந்த எழுத்தின்  மூலம் சிட்டுவின் பின்வரும் எழுத்துப்பின்னனிகள்  தெளிவாக தெரிகின்றன,

  1. இந்த உலகத்திற்கு தன்னை அல்லது தங்களை இனவிடுதலைபோராட்டத்தின் ஆதரவாளரென காட்டும் ஒரு ஆன்மா போரில் தங்களை ஈந்த போராளிகளையும் போராட்டத்தையும் எப்படி கொச்சை செய்கின்ற மனநிலைக்கு போய்ச்சேர்ந்திருக்கிறது என்பது.
  2. இனவாதம் என எதிர்தரப்பை எதிர்க்கும் அது எதிர்தரப்பை விட எத்துனை இனத்துவமும் பாலியல் வக்கிரமும் கொண்டு காணப்படுகின்றது என்பது.
  3. எங்கோ பிரதி செய்த கதைகளும் வாழ்வும் தீர்ந்து போகும் பட்சத்தில் ஓர் ஆண்மன எழுத்து எத்தகைய வக்கிரத்தை நோக்கி போகுமென்பது.

 

சிட்டு தனது எழுத்தில்

//அலரிமாளிகையில் கண்ணாடிப்பெட்டியில் கிடக்கும் புத்தரின் புனிதப்பல்லுக்கு ஒரு தமிழச்சியின் பிறப்புறுப்பைக் கீறி இரத்தம் தெளித்தார்கள் என்கிற ஒரு செய்தியை தடுப்பில் இருந்த போராளிகளுக்கு இடையில் இராணுவமே கசியவிட்டது.//

 

என்று எழுதியிருப்பார்  ஒட்டுமொத்த பெளத்த –சிங்கள மக்களையும் இங்கே இனவாதிகாளகவே பார்க்கும் தமிழ்தேசிய பிற்போக்கு சக்திகளின் மனநிலையில் சிட்டுவும் இருப்பது தெளிவாக புலனாகின்றது . புத்தரின் தந்த தாதுக்கள்  அலரிமாளிகையில் உள்ளதா தலதாமாளிகையில் உள்ளதா என்று கூட தெரியாத குழந்தையை தமிழ்தேசிய சமூக மனநிலை எத்தகைய வக்கிரக்காரனாக மாற்றியிருக்கின்றது என்பதற்கு அகரமுதல்வனே கடும் எடுத்துக்காட்டு.

 

இதை விட மிகப்பாரதூரமானது பெண்போராளிகள் பற்றிய அவருடைய சித்தரிப்புக்கள், பெண்போராளிகள் போரில் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டிருந்தாலும் கூட , அதை எழுத்தில் கொண்டு வரும் ஒரு அறமுள்ள பிரதியாளன் எதனை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை மனிதத்துவம் இல்லாத வார்த்தைகளை அகரமுதல்வன் கொட்டி நிரப்புகின்றார்.

சயந்தனின் ஆதிரையில் ஒரு இடத்தில் இவ்வாறுவரும்

 

//நிலாமதி சொன்னது.

ஒரு ஆண்போராளி ஆமியின்ர கையில பிடிபட்டா எதுக்காக குப்பியை கடிக்கிறானோ அதேகாரணத்துக்காக மட்டும் தான் நாங்கள் நஞ்சை கடிக்கிறம்

மற்றும் படி நாங்கள் பொம்பிளை பிள்ளையள்  எங்கட உடம்ப அவன் மானபங்கப்படுத்துவான் ..அப்பிடியொண்டு நடந்த பிறகு நாங்கள் உயிர்வாழ்வே முடியாது எண்டெல்லாம் நீங்கள் நினைக்கூடாது. நானாயிருந்தால் எங்கையோ காயப்பட்ட இடத்தில் என்னையொரு ஆமிக்காரன் பிடிச்சனெண்டால், பலாத்காரம் செய்தானெண்டால் , ஒருவேளை அதுக்கு பிறகும் அவனைச்சுடுறதுக்கு  வாய்பொண்டு கிடைக்குமெண்டால்  சுட்டுப்போட்டு வாற வழியில கிணத்திலையோ அருவிலையோ தலைகுளிச்சிட்டு திரும்பி வருவன்.//

 

ஒரு அறமுள்ள பிரதியாளனின் எழுத்து மனிதத்துவத்தை இப்படித்தான் கட்டியெழுப்பும் , அகரமுதல்வனைப்போல பாலியல் வக்கிரத்தை அதுகோராது , இறந்து போன ஆன்மாக்களை கொச்சை செய்கிறார் , அதைவிட இன்று தடுப்பிலிருந்து வந்து வாழப்போராடும் ஒவ்வொரு முன்னாள் பெண்போராளியையும் இந்த எழுத்து தற்கொலைக்கு தூண்டாதா ? அவர் குறிப்பிடுவது போல் நடந்திருந்தாலும் , ஒரு மனத்தை  இவ்வாறு கீறி கிழித்தல் எவ்வாறான மனநிலை ?

 

எனக்கு தெரிந்து போர்னோ படங்களை பார்த்து சுயமைதுனம் செய்வதனைப்போலவே இதை அகரமுதல்வன் எழுதியிருக்கிறார் , தமிழ்க்கவி சொல்வதைப்பொல

 

//எது எப்படியாயினும் பாலியல் வக்கிரம் கொண்ட ஒரு மிருகம் தன் உணர்ச்சிகளை மறைக்க முடியாமல் கற்பனையிலேயே பெண்களைத் துகிலுரிந்து அவர்களை கெடுக்கிறேன் பேர்வழி என்று தானே தன குறியை விறைக்கப்பண்ணி கருகிய சோழக்கதிரில் ஓணாான் ஏறுவதுபோல பாவம் அவனுடைய அரிப்பை எங்காவது செங்கல்லுப் போறணையில் கொண்டுபோய் தேய்த்தும் தீர்த்திருக்கலாம் இப்ப எழுதப்போய்…அவன் தாயின் வயிற்றிலிருந்து உலகுக்கு வந்த பாதையை தாயிடமே பார்க்க முனைந்திருக்கிறான் அவனுக்கும் சகோதரி மனைவி என்றிருந்தால் அவர்களது மானத்தையும் அவனே சுகித்திருக்கிறான் என்பதே மெய். இப்படிப்பட்டவனை புணர ஒரு பெண் நினைப்பதைவிட அவனுடைய குறியை கட்டையில் வைத்து கோடரியால் துண்டித்திருக்கலாம்.அவனுக்கு மனைவி இருந்தால்…அல்லது வர நினைத்தால் அவளுக்கே இது சமா்ப்பணம்//

 

என்று என்னால் சொல்ல முடியவில்லை , அகரமுதல்வன்அறம் மற்றும்  நெர்மையற்ற உளவியல் சிக்கல் மிக்க ஒருவரகாவே கருதப்படவேண்டியவர் . எதிர்தரப்பை கண்டிக்கிறேன் என்று சொந்த சகோதரிகளின் நிர்வாணத்தை துகிலுரிக்கின்றார் ,  உடலில் வலி இறங்க உத்தரித்து இறந்த எந்தவொரு போராளியின் ஆத்மாவும் அவரை மன்னிக்காது  .

இனமொன்றின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைய அநியாயங்களை , பேசுவதற்கு இலக்கியத்திடம் ஒரு நேர்மை இருக்கவேண்டும் , உள்ளே இருக்கும் அந்த ஒளி இல்லாதவர் இலக்கியத்தை கையிலெடுத்தால் இத்தகைய பேராபத்தை கொண்டே நிறைவு பெறும்.   தியாகங்களும் , மனிதத்துவமும் தோற்கடிக்கப்படும் ,  அகரமுதல்வனின் பிரதியை விளங்கி கொண்ட எவரும் தங்களுடைய சகோதரியை காதலியை அம்மாவை அவர் இருக்கும் திசைக்கும் கூட்டி செல்லாமல் இருப்பர் என்றே நினைக்கிறேன் ஏனெனில்  உத்தரித்து இறந்து போன சிவகாமியின் பிணத்தை தோண்டியெடுத்து அதை ……. வேண்டாம்.

இத்தகைய ஒரு ஆன்மாவால் ஒரு இலக்கியத்தை இல்லை நேர்மையான ஒரு வசனத்தை கூட ஆக்கிவிடமுடியாது.

 

இங்கே அகரமுதல்வன் என்பவர்

ஒரு மோசமான பாலியல் வக்கிரம் கொண்ட ஆண்

பிறழ்வான தமிழ்தேசிய மனநிலையை கொண்ட மனம் கொண்ட ஆண்

அறமோ நேர்மையோ இன்னும் கைவரப்பெறாமல் இருக்கும் ஒரு ஆன்மா

 

மொத்தத்தில் அகரமுதல்வன் அல்லது சிட்டு

 

வக்கிரத்தை புணருமோர் ஆண்குறி.

(இனி இவ்வாறான மோசமான தனிநபர் தாக்குதல் மிக்க ஆண்சொற்களை கொண்டு யாரையும் புண்படுத்த தக்க எழுத்தை எழுதாமல் இருக்க எல்லா ஆன்மாவும் எனக்கு துணையிருக்கட்டும்

 

ஆமேன்)

-ய

 

 

Share this Post

Leave a Reply