Monthly Archive: March 2016

Mar 25

Fuck the british -லண்டன்காரரை முன் வைத்து

    01 கோலியாத் கிழவன் தன்னுடைய குறிப்பு புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருந்தான். இலங்கைத்தீவில்  “பறங்கி கோட்டை போனது போல” என்று ஒரு வழக்கு நிலவி வருகின்றது. இது ஒரு வரலாற்று  சம்பவத்தை குறிக்கும் தொன்ம வழக்காகும், 1505 ஆம் ஆண்டு ஐரோப்பிய  நாடுகாண்பயணிகளான  போர்த்துகேயரது லொரன்ஸ் சோ டி அல்மெய்டா  என்ற கப்பல் படை தளபதி புயல் காற்றில் சிக்குண்டு  இலங்கையின் தென் துறைமுகமான காலிக்கடற்கரையில் வந்து நங்கூரமிட்டான். அப்போது இலங்கை இராசதானியின் தென் பகுதியை  …

Continue reading »

Mar 21

ஜேசுவின் மகளைப் பின் தொடர்தல்

  அப்பொழுது ஆதாம் இவள் என் எலும்பில் எலும்பும் மாம்சத்தில் மாம்சமாகவும்  இருக்கிறாள் . இவள் மனுஷனில் இருந்து எடுக்கப்பட்டமையால் மனுஷி என்று அழைக்கப்படுவாள் என்றான்                                                  -ஆதியாகமம் 2 : 23 அவளை அன்று தற்செயலாகத்தான் கண்டேன், வெள்ளை உடையில்  அந்த மழைநாளின் …

Continue reading »

Mar 18

அகரமுதல்வன் : வக்கிரத்தைப் புணரும் ஆண்குறி.

விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு முன்னாள் போராளிகளும் ,ஆய்தத்தோடு இருந்த போது ; சரியோ தவறோ ஒரு இயக்கத்தில் இருந்தபோது ; அவர்களிடமிருந்த நிமிர்ந்த பார்வையின் தற்போதைய நிலையை எத்தனைபேர் தரிசித்திருக்கிறீர்கள் ? அவர்களின் உடலில் இரும்புத்துருக்களும் துண்டுகளும் இன்னும் அகற்றியும் அகற்றாமலும் இருப்பினும் அவை மனம் வரை இறங்கி உறுத்திக்கொண்டிருக்கின்றது. காவலாளிகளாகவும், கூலிகளாகவும் , ஏன் பிச்சைக்காரர்களாகவும் , இயல்புச்சமூகத்திலிருந்து விரும்பியும் விரும்பாமலும் விலகி இருட்டிலே வாழ்கையை வாழ்ந்து தீர்த்துகொண்டிருக்கின்றது அவர்களின் ஆன்மா . மேற்படி ஜீவிக்கும் ஆன்மாவையும் …

Continue reading »

Mar 11

ஏவாளின் புரவி

  ஆதாம் கடவுளிடம் மன்னிப்புக்கோரி ஒரு கடிதத்தை எழுதி முடித்திருந்தான். அன்று காலையில் தன் பிரியமான புள்ளிமான்களில்  தொடைகளில் அதிகம் சதைப்பிடிப்பான, அதிக தூரம் பயணிக்க தகுந்த  தெரிவு செய்து ,அதன் கழுத்தில்  மன்னிப்பு கோரிய கடிதத்தை கட்டி வடக்கு புறமாக அதனை தட்டிவிட்டான். அது செல்வதை  குன்றொன்றின் மீது ஏறி நின்று பார்த்தபடியிருந்தான். அப்போது அவனுக்கு பின்னால் கனைப்புச்சத்தம் கேட்டது திரும்பிப்பார்த்தான். “ம்” கம்பீரமாக நின்றிருந்தது. ”ம்”ஒரு பெண் குதிரை , அப்பளுக்கற்ற  வெள்ளைத்தேகம்  , …

Continue reading »

Mar 10

BOX – கொடு நெடி.

  Box -முதலாம் கதை .   அண்ணா பெரும்பாலும் நள்ளிரவில்தான்  வருவான் , கூடவே இரண்டோ மூன்றோ போராளிகளையும் அழைத்துவருவான்.  அண்ணா வந்தால் அம்மா பரபரப்பாக புட்டோ இடியப்பமோ அர்த்த ராத்திரியில் அவிக்க  தொடங்கி விடுவாள் ,அண்ணாவும் அவன் சகாக்களும் அப்பாவுடன் இருந்து அரசியல் பேசுவார்கள் , அண்ணா வருவது பொறுப்பாளருக்கு தெரியாது என்பதால் நாங்கள் யாரும்  பள்ளிகூடத்திலோ , நண்பர்களிடமோ வாய் திறக்க கூடாதென்று அம்மா சொல்லியிருந்தாள். அண்ணா இயக்கத்தில் இணைந்து ஒருவருடம் தான் …

Continue reading »

Mar 02

சட்டத்தில் நிறுத்தப்பட்ட பிரதியாளார்கள் – நிலாந்தனின் ஆதிரை- உரையாடலை முன்வைத்து.

    (பாவ மன்னிப்பு-    ஆதிரை நாவலின் மீதான உரையாடல் வெளியில் மெளமாய் இருந்ததற்கு மன்னிப்புக்கோரவேண்டியவனாகியுள்ளேன். அதாவது என்னிடம் மட்டும் மன்னிப்பு கோர வேண்டியவனாக உணர்கிறேன்.) ஆதிரை நாவல் பற்றிய நிலாந்தனின் “ஆதிரையின் அரசியல்” என்ற மையத்தை சுற்றியோடிய உரையின் முற்பாதியை எல்லோரும் தெளிவாக மனம் கொள்ள வேண்டும் , காரணம் அது ஆதிரை எனும் பிரதியின் மீதான அபிப்பிராயம் மட்டுமல்ல ஆதிரையை வகை மாதிரியாக கொண்ட ஒரு முக்கிய வியாக்கியானமுமாகும் , பின் போர்ச்சூழலில் …

Continue reading »