கொன்றை மலர் | காளம் 13 வசந்தம் நிமிர்ந்து சுவர்களைப் பார்த்தாள். கண்ணாடி அலுமாரிகளுக்குள் அடுக்கி வைத்திருந்த ஏடுகளின் வாசனை சூழ்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு அலுமாரிக்கும் உத்தூரணமாக நீற்றினால் குறியிட்டு குங்குமமும் மஞ்சளும் வைத்திருந்தார்கள். முழுதாய் ஐய்யாயிரம் ரூபாய் செலவு செய்து தகப்பனும் தாயும் அவளை `காண்டம்` பார்க்கவென்று கூட்டி வந்திருந்தனர். வசந்தம் முதல் தூமை கண்டபிறகுதான் எல்லாம் தொடங்கிற்று. கெட்ட கனவுகள், திடுகிட்டு திடுக்கிட்டு எழுந்து கொண்டாள் பிள்ளை. அவை கனவுகளைப் போல இல்லை….