Yathaadmin

Author's details

Date registered: February 24, 2016

Latest posts

  1. இறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா. — July 16, 2017
  2. மெடூசாவின் கண்களின்முன் நிறுத்தப்பட்ட காலம்’ – ஆக்காட்டியிடமிருந்து. — July 13, 2017
  3. புத்த (மாற்றப்பட்ட வார்த்தை) — June 14, 2017
  4. பாலைப்பழமும் பசித்த மானுடமும் — May 24, 2017
  5. விற்கப்படும் காயங்களும் வாங்கப்படும் கண்ணீரும் – ரஜனிகாந் வருகையின் ஆர்பாட்டத்தை முன்வைத்து — March 30, 2017

Most commented posts

  1. ஏவாளின் புரவி — 4 comments
  2. பிரபாகரனின் மீசை — 2 comments
  3. சட்டத்தில் நிறுத்தப்பட்ட பிரதியாளார்கள் – நிலாந்தனின் ஆதிரை- உரையாடலை முன்வைத்து. — 1 comment

Author's posts listings

Jan 06

Pan’s Labyrinth – மந்திரக் கதவின் ஊடாக போரிலிருந்து வெளியேறுபவனின் குறிப்பு

  என்னுடைய    சிறுவயது முழுவதும்  மாயாஜால கதைகளாலும் , வீரசாகசக் கதைகளாலும் நிரப்பப் பட்டதாகவிருந்தது . இன்று வரை அவற்றின் தாக்கத்தில் இருந்து மீண்டுவரமுடியாமல் இருக்கிறேன். சிறுவயதின் ஒரு பாகத்தை மேற்கத்திய சாகசக்கதைகளான ராபின்ஹீட் , அலிஸ் இன் வொண்டர்லாண்ட் , கலிவரின் பயணங்கள் , ரொபின்சன்  குருசோ தொடங்கி  பழைய கிரேக்க தொன்ம சாகசக்கதைகளான , ஹர்குலிஸ் ,தீஸியஸ் , ஜேசன் , போன்றனவும்  பின் வந்த குளோனிக்கல் ஒவ் நார்னியா  தொடர் நாவல்களும் , …

Continue reading »

Jan 02

ராஜகுமாரியின் குதிரை .

  2002.06.3 விசுவமடு , சோதியா படையணி முகாம். அக்காக்கள் அந்தப்பெரிய பள்ளத்தை நிரவிக்கொண்டிருப்பதைப் பார்த்தபடியிருந்தாள் கெளஷல்யா. அவள் கையில் ஒரு குதிரைப்பொம்மை இருந்தது. தனிமையில் இருக்கும்போது அப்பொம்மையை வைத்தே விளயாடிக்கொண்டிருப்பாள். மாலதியக்கா இருக்கச்சொன்ன தென்னங்குற்றியில் கால்களை காற்றில் உலவ விட்டபடி கையில் குதிரை பொம்மையுடன் ,துர்க்கா அக்கா கொடுத்த கண்டோசைக் கடித்துக்கொண்டிருந்த கெளஷல்யாவைப்பற்றித்தான் கிடங்கை மூடிக்கொண்டிருக்கும் பெண்போராளிகளும் பேசிக்கொண்டிருந்தனர். “கெளசின்ர அப்பா நேற்றும் தாய்க்கு அடிச்சுப்போட்டாராமடி ” “அந்தாள விதுசாக்காட்ட சொல்லி ஒருக்கா கூப்பிட்டு வொன் …

Continue reading »

Nov 15

ஈழத்து சினிமா – கருத்தியல்களும் வரையறைகளும் (நிகழ்படம் , கரவொலி பற்றிய குறிப்புக்கள் .)

    ஈழத்து சினிமா – கருத்தியல்களும் வரையறைகளும் நிகழ்படம் , கரவொலி பற்றிய குறிப்புக்கள் . எமக்கான அடையாளங்களை உருவாக்குதல் என்பதும் , எமக்கான கலையம்சங்களை இந்திய – தமிழ்நாட்டுச் சூழலில் இருந்து விலகி நின்று உரையாடல் என்பதுமே இன்றை ஈழத்து கலை இலக்கிய செயற்பாடுகளின் வேண்டப்படும் அம்சமாகும் . சுயாதீனமான ஓவியக்கண்காட்சிகள் , திரைப்படத்திருவிழாக்கள் , இசை நிகழ்வுகள் , இலக்கிய செயற்பாடுகள் , வடிவமைப்பு -பதிப்புதுறையின் சுயாதீன வளர்ச்சி , இதழியலின் வளர்ச்சியென்று …

Continue reading »

Oct 31

நண்பர்களுக்கான குறிப்புகள்.

  நண்பர்களுக்கான குறிப்புகள்.   இன்று மதியம் வரை நடந்து முடிந்த மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின் போராடட்டம் பற்றிய அழகியல் பூர்வமான வர்ணனைகளையோ சொல்லாடல்களையோ பயன்படுத்தி ஒரு கட்டுரை வடிவத்தில் நானிதை பதிவு செய்யும் மனநிலையில் இல்லை.எனினும் சிலதை பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரு வேளை நாட்டின் எல்லா நீதிக்கோரிக்கைகளைப்போலவும் இப்போராட்டம் நமத்துப்போனாலோ அல்லது தோற்றுப்போனாலோ அதற்கான முற்று முழுதான காரணமாக நாம் தான் இருக்கப்போகின்றோம் என்பதை நான் என்னுடைய பல்கலைக்கழக சகோதரர்களுக்கு …

Continue reading »

Oct 29

ஏவாளின் புரவி

    ஆதாம் கடவுளிடம் மன்னிப்புக்கோரி ஒரு கடிதத்தை எழுதி முடித்திருந்தான். அன்று காலையில் தன் பிரியமான புள்ளிமான்களில்  தொடைகளில் அதிகம் சதைப்பிடிப்பான, அதிக தூரம் பயணிக்க தகுந்த  தெரிவு செய்து ,அதன் கழுத்தில்  மன்னிப்பு கோரிய கடிதத்தை கட்டி வடக்கு புறமாக அதனை தட்டிவிட்டான். அது செல்வதை  குன்றொன்றின் மீது ஏறி நின்று பார்த்தபடியிருந்தான். அப்போது அவனுக்கு பின்னால் கனைப்புச்சத்தம் கேட்டது திரும்பிப்பார்த்தான். “ம்” கம்பீரமாக நின்றிருந்தது. ”ம்”ஒரு பெண் குதிரை , அப்பளுக்கற்ற  வெள்ளைத்தேகம்  …

Continue reading »

Oct 27

ஹர்த்தால் – விடுமுறையைக் களித்த படி போராடுதல்

ஒரு தேசம் உற்பத்தி செய்த போராட்ட வடிவங்கள் , அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகள் அந்ததந்த தேசங்களின் அரசியல் , புவியியல் மற்றும் சமூகபொருளாதார நிலைமைகளுக்காக உருவானவையாகவே இருக்கும். குறிப்பாக உள்நாட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த நாட்டின் குழுக்களுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ காலத்தின் தளத்தில் நின்று உதவுகின்றன. இந்திய பெருந்தேசத்தில் காலனித்துவத்தின் போதுகடைப்பிடிக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் காலனித்துவத்தின் அரசியல் பூர்வமான அகற்றலில் பெரும் பங்காற்றின. எனினும் காலனித்துவத்தின் சமூக ,பொருளாதார , பண்பாட்டு தாக்கங்களையும் தொடர்ச்சியையும் இந்திய எதிர்ப்புக்கள் …

Continue reading »

Sep 11

நாவல் பழக்கதை (version 2.0)

நான் ஒரு நாவல் பழ பிரியன். சிறுவயது முதல் நாவல் பழத்தின்ர சுவை நாக்கில ஒட்டிக்கொண்டு இண்டைக்குவரைக்கும் குறையாமல் இருக்கு. இது நேசறியில் ஆரம்பித்தது , சிறுவயதில் கரு கருவென நாவல் பழம் மாதிரி இருப்பன் எண்டு அம்மா சொல்லுவா , நேசறிக்கு போகேக்க தெருவில இருக்கிற  எல்லா பிள்ளையளோடவும் நேசறிக்கு நடந்து போவன். நாங்கள் போறவழியெல்லாம் அதிகம் நாவல் மரங்கள் இருக்கும், நாவல் பழ சீசன் தொடங்கீட்டு எண்டா போகும் போதும் வரும் போதும் பழம் …

Continue reading »

Aug 25

நல்லூர் – யாழ்நிலத்தின் அடையாளமாக உருவாதல்

(ஒரு நிலத்தின் அடையாள உருவாக்கம் என்பது மக்களின் வாழ்வியலை அசைக்கின்ற  முக்கிய பங்கைனை ஆற்றுகின்றது. நம்பிக்கை , பண்பாடு , அரசியல் ,சமயம் , பொருளாதாரம் , கலை  என்று பல உட் கூறுகள்  புரையோடி உருவாக்கும் ஒவ்வொரு அடையாளமும் மக்களின் பெயரால் சமூக அசைவுக்கு துணைநிற்கின்றன. அவ்வகையில் குறுங்காலத்தில்  ஓர் தன்னை அடையாளமாக மாற்றிய  அல்லது மாற்றப்பட்ட நல்லூர் பற்றிய அடையாள உருவாக்க  வாசிப்பை இக்கட்டுரை செய்ய முற்படுகின்றது.) ஆவணிமாதத்தின் முதற்பகுதியில் வீடுகளில் மச்சத்தையும் புலாலையும் …

Continue reading »

Aug 15

பிரபாகரனின் மீசை

காலையில் அம்மா தாடி மீசையை எடு என்று நச்சரிக்கா விட்டால் இதை எழுததொடங்கியிருக்கவே மாட்டேன். அத்துடன் மேற்படி தலைப்பு நீங்கள் இந்த பத்தியைப் படிக்கத்தொடங்குவதற்காகவும் எனக்கு பிடித்த  ஒரு முக்கிய மீசைக்காரனின் மீசையின் பெயரில்  பத்தியைத் தொடங்கும் சுய ஆசையினாலும் இடப்பட்டிருக்கிறது. . YES…… மீசை , தாடியைப்பற்றிதான் நானும் நீங்களும் இங்கே உரையாடப்போகிறோம். பிரபாகரன் மீசையைப்பற்றி பத்தியின் இறுதியில்தான் உரையாடப்போகின்றோம் என்பதால்  கடைசிவரை படிப்பீர்கள் என்பது என் நப்பாசை. மீசையையும் தாடியையும்  ஒரு கலாசாரமாகவோ , …

Continue reading »

Jul 29

பசியோடு அலைபவர்களும் நீர்நிலைக்கதைகளும்.

நேற்று காலையில் வீட்டிற்கு வந்து தனுஷ் என்னை ஏற்றும் போதே கைதடிக்கு போய்விட்டு போகவேண்டும் என்றான். சரியென்று தலையாட்டிவிட்டு ஏறிக்கொண்டேன். காலையில் அலுவலகம் போக எடுக்கும் அந்த 45 நிமிடங்களில் ஓயாமல் ஏதாவது  அலட்டிக்கொண்டும் பாடிக்கொண்டும் போவோம் , வரும் போதும் அப்படித்தான்.  தனுசுடனான பெரும்பாலான அரட்டைகளில்  இலக்கியம் , சினிமா , அரசியல் என்று ஓடிக்கொண்டே இருக்கும்.  தனுஸ் ஒரு தீவிர வாசகன் , சினிமா இரசிகன்  அதுவும் அவன்  பேச்சில் எப்போதும் மலையாள வாசம் …

Continue reading »

Older posts «

» Newer posts