Monthly Archive: October 2016

Oct 31

நண்பர்களுக்கான குறிப்புகள்.

  நண்பர்களுக்கான குறிப்புகள்.   இன்று மதியம் வரை நடந்து முடிந்த மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின் போராடட்டம் பற்றிய அழகியல் பூர்வமான வர்ணனைகளையோ சொல்லாடல்களையோ பயன்படுத்தி ஒரு கட்டுரை வடிவத்தில் நானிதை பதிவு செய்யும் மனநிலையில் இல்லை.எனினும் சிலதை பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரு வேளை நாட்டின் எல்லா நீதிக்கோரிக்கைகளைப்போலவும் இப்போராட்டம் நமத்துப்போனாலோ அல்லது தோற்றுப்போனாலோ அதற்கான முற்று முழுதான காரணமாக நாம் தான் இருக்கப்போகின்றோம் என்பதை நான் என்னுடைய பல்கலைக்கழக சகோதரர்களுக்கு …

Continue reading »

Oct 29

ஏவாளின் புரவி

    ஆதாம் கடவுளிடம் மன்னிப்புக்கோரி ஒரு கடிதத்தை எழுதி முடித்திருந்தான். அன்று காலையில் தன் பிரியமான புள்ளிமான்களில்  தொடைகளில் அதிகம் சதைப்பிடிப்பான, அதிக தூரம் பயணிக்க தகுந்த  தெரிவு செய்து ,அதன் கழுத்தில்  மன்னிப்பு கோரிய கடிதத்தை கட்டி வடக்கு புறமாக அதனை தட்டிவிட்டான். அது செல்வதை  குன்றொன்றின் மீது ஏறி நின்று பார்த்தபடியிருந்தான். அப்போது அவனுக்கு பின்னால் கனைப்புச்சத்தம் கேட்டது திரும்பிப்பார்த்தான். “ம்” கம்பீரமாக நின்றிருந்தது. ”ம்”ஒரு பெண் குதிரை , அப்பளுக்கற்ற  வெள்ளைத்தேகம்  …

Continue reading »

Oct 27

ஹர்த்தால் – விடுமுறையைக் களித்த படி போராடுதல்

ஒரு தேசம் உற்பத்தி செய்த போராட்ட வடிவங்கள் , அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகள் அந்ததந்த தேசங்களின் அரசியல் , புவியியல் மற்றும் சமூகபொருளாதார நிலைமைகளுக்காக உருவானவையாகவே இருக்கும். குறிப்பாக உள்நாட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த நாட்டின் குழுக்களுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ காலத்தின் தளத்தில் நின்று உதவுகின்றன. இந்திய பெருந்தேசத்தில் காலனித்துவத்தின் போதுகடைப்பிடிக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் காலனித்துவத்தின் அரசியல் பூர்வமான அகற்றலில் பெரும் பங்காற்றின. எனினும் காலனித்துவத்தின் சமூக ,பொருளாதார , பண்பாட்டு தாக்கங்களையும் தொடர்ச்சியையும் இந்திய எதிர்ப்புக்கள் …

Continue reading »