தோறை | நாவல் | அறிவிப்பு

0
295

என்னுடைய இரண்டாவது நாவலான ’தோறை’ செப்டெம்பர் 2026 இல் காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து வெளியாகின்றது. இவ்வருடத் தொடக்கத்தில் இந் நாவலை எழுதி முடித்திருந்தேன். முதல் நாவலான நகுலாத்தைக்கும் தோறைக்குமான பயணம் என்னளவில் முக்கியமானது. ஒரு எழுத்தாளரின் இரண்டாவது நாவல் என்பது அவர் எந்தச் சாட்டும் சொல்ல முடியாதபடிக்கு நாவலாக ஆகி இருக்க வேண்டும். இந்நாவலை எழுதும் போதும் சீரமைக்கும் போதும் அடைந்த  உணர்வுகளும்  புனைவில் வாழும் அனுபவமும் வாழ்வு மீதான பற்றுதலையும் நம்பிக்கையையும்  செறிவாக்கியபடியே இருந்தது. பயில்வும் களமும் ஒன்றாக நிகழ்ந்தது. நாவல் என்ற சமகாலத்தின் முதன்மையான இலக்கிய வடிவம் பற்றிய  நானே சந்தித்துத் தெரிந்து கொண்ட விடயங்கள் நற்பேறு என்றே சொல்வேன். நகுலாத்தையில் இருந்து முழுக்க முழுக்க வேறொரு உள்ளமும் மொழியும் நாவலில் கூடி வந்திருப்பதை நானே உணர்ந்த தருணங்கள் அலாதியானவை. அவைபற்றிய உரையாடல்களைத் தொடர்ந்து எழுதும் எண்ணம் உண்டு.

நாவலைப்பற்றி எந்த முன் முடிவையும் இங்கே அளிக்கத் தேவையில்லை. நாவலை விட்டு நானே பெருமளவில் விலகிவிட்டேன் என்ற உணர்வே இருக்கிறது. அதை எழுதி முடித்த போது அடைந்த நல்லுணர்வும் மகிழ்ச்சியும் மட்டுமே அருகில் இருப்பவை. தோறை நாவலை நண்பர்களான கிரிசாந் – பிரிந்தா இணையருக்குச் சமர்ப்பித்திருக்கிறேன்.

தோறை நாவலினை வெளியிடும் காலச்சுவடு பதிப்பகத்தாருக்கும் நாவலை எழுதும் போது  உடனிருந்த அனைவருக்கும், அட்டைப்பட ஓவியர் பாத்திமா ருக்சனா விற்கும்,  என்னுடைய அன்பும் நன்றிகளும். 

இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ளவர்கள் நாவலுக்கான  முற்பதிவுகளை  என்னுடைய  மின்னஞ்சல் முகவரியான pratheepkunaradnam@gmail.com இலும்  +94 77910459 என்ற வட்சப் இலக்கத்திலும் மேற்கொள்ள முடியும்.  மேலதிக விபரங்கள் www.yatharthan.com என்ற என்னுடைய இணையத்தளத்தில் தொடர்ந்து கிடைக்கும்.

இந்திய விலை : ரூ 470  இலங்கை விலை : ரூ 3000

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here