என்னுடைய தோறை நாவல் சுங்கத்தினால் தடுக்கப்பட்டு பத்து நாட்களுக்கு மேலே ஆகி விட்டது. இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை. அதற்கமைய மனித உரிமை ஆணைக்குழுவில் குறித்த பிரச்சினை தொடர்பில் முறைப்பாடு ஒன்றினை அளித்திருக்கிறேன். நிலத்திலும் புலத்திலுமாக தமிழ் எழுத்தாளர்கள் சேர்ந்து கையெழுத்திட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அவ் அறிக்கையின் தமிழ், சிங்கள், ஆங்கிலம் ஆகிய மொழிகளின் பிரதிகளையும் கையளித்திருக்கிறேன்.
தொடர்ச்சியாக எழுத்து சூழல் மீது இத்தகைய அசட்டுட்டுத்தனமும் அழுத்தங்களும் இருந்து கொண்டிருக்கும் சூழ் நிலையில் இன்னும் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து சிங்கள், தமிழக ஊடகங்கள் இப்பிரச்சினையை ஒரு அடிப்படை மனித உரிமைகள் பிரச்சினையாகக் செய்திகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளனர். தமிழ் ஊடகங்கள் வழமை போல் மவுனம். இவ்வேளையில் சனநாயக வழியில் தடுக்கப்பட்ட புத்தகங்கள் விடுவிக்கப்படவும், தொடர்ந்து இப்பிரச்சினைகளுக்கான சரியான பொறிமுறை உருவாக்கப்படவும் எங்களுடன் இணைந்து குரல் கொடுக்கும் சிங்கள, தமிழ் மொழிச் சமூகங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள், வாசகர்கள், ஊடகவியளார்களுக்கு என்னுடைய நன்றி. மெய்யாகச் சொல்லபோனால் தமிழ் நண்பர்கள் அளவிற்கு சிங்கள நண்பர்களின் குரல்களும் கரிசனையும் கிடைக்கப் பெறுவதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அதைப்பற்றி விரிவாகவே எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். கடந்த பத்து வருடங்களில் தமிழ் கலை இலக்கியச் சூழல் சிங்கள கலை இலக்கியச் சூழலுடன் எவ்வளவு நெருக்கமும் இணைவையும் அடைந்திருக்கிறது என்பது நம்முடைய பொற்கனவின் ஓர் பகுதி என்றே சொல்ல வேண்டும். சனநாயகம் என்பது வெறும் அரசியல் சித்தாந்தமல்ல. ஏனென்றால் அது உருவாகி வந்தது மனிதர்களின் தலைக்குள் இருந்தல்ல.
இடதுசாரி அரசாங்கமும் எழுத்தாளரும்
புத்தகத் தடுப்பு எழுத்தாளர் கூட்டறிக்கை
எழுத்தாளர் கூட்டறிக்கை இறுதி வடிவம்
Three Novels, One Ban – Southbound Review
தமிழ் நூல்களும் மீண்டும் மீண்டும் தொடரும் சுங்கத் தலையீடுகளும் – ரதீந்திர குருவித
ஒரு தடுப்பும் மூன்று நாவல்களும் – வி. கணேஷ்



